Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

DIPLOMA -டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

பட்டயப் படிப்பு (டிப்ளமோ) படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் வெள் ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதில், கல்லூரிகளில் டிப்ளமோ இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவிகளும்,பட்டயப் படிப்பை முடித்தவர்களும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விஐடி பல்கலைக்கழக வேலை வாய்ப்புத் துறையும், இயந்திரவி யல் துறையும் இணைந்து டிப் ளமோ படித்தவர்களுக்கான வளாக நேர்முக தேர்வை வேலூர் விஐடி அண்ணா அரங்கத்தில் பிப் ரவரி 3-ஆம் தேதி (வெள்ளிக்கி ழமை) காலை 10 மணிக்கு நடத்துகின்றன.

இந்த தேர்வில் கலந்து கொள்ள கல்லூரியில் பட்டயப் படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண் டிருக்கும் மாணவ, மாணவிகள், பட்டயப் படிப்பை முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம்.

இந்த வளாக நேர்முகத் தேர் வுக்கு இந்தியாவின் புகழ்பெற்றநிறுவனமான ஃபாஸ்ட் சோலார், டி.வி.எஸ். வேலியோ, பிரேக்ஸ் இந்தியா, இன்டோ கூல், டெக்னிப் எனர்ஜிஸ், மெக்டர் மார்ட் உள் பட 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

இதற்கான நுழைவு சீட்டை தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வ ரிடம் பெற்று வரவேண்டும். டிப் ளமோ படித்து முடித்தவர்கள் விஐடியில் உள்ள சில்வர் ஜூப்ளி டவர் 7-ஆவது மாடி, அறை எண் 717-இல் பிப்ரவரி 1-ஆம் தேதிக் குள் அனைத்து வேலை நாள்களில் நேரில் வந்து நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த நேர்முகத் தேர்விற்கு வரு வோர் சுய விவரம், கல்வி சான் றிதழ்கள், ஆதார், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். இதில் வேலூர் மாவட்டம், அதன் அரு கில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. டிப்ளமோ படித் தவர்கள் இந்த வாய்ப்பை பயன்ப டுத்திக்கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments