Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 102 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 102 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்ப டும் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுதா தெரிவித் தார்.

தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடு தல் தலைமைச் செயலர் நசீமுதீன், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோரின் அறிவுறுத்தலின் படியும், சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி, தொழிலாளர் இணை ஆணையர் வேல்முருகன் ஆகியோர் வழிகாட்டுதலின்படியும்,திருவள்ளூர்தொழி லாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) சுதா உள்ளிட்ட அதிகாரிகள் விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுதொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமலும்,விதிமுறைகளை முறையாக பின்பற்றாமலும் செயல்பட்ட 102 நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

 இதைத் தொடர்ந்து முரண்பாடு காணப்பட்ட நிறுவனங்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  இது குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் சுதா கூறியதாவது: தேசிய விடுமுறை தினங்களில் தொழிலாளர்களை பணி செய்ய அனு மதிக்கப்படும்பட்சத்தில் அவர்களுக்கு அன்றைய நாளில் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அல்லது வேறு தினத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத் திய நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments