தற்காலிக ஆசிரியர் பணி அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:
காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மற்றும் அரியலூர் மற்றும் உடையார்பாளையம் ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சியர் அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கான ஊதியம் இடைநிலை ஆசிரியருக்கு ரூ.7,500 வீதம் வழங்கப்படும். இதற்கான கல்வித் தகுதி பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடத்தின் பெயர் இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர், கல்வித் தகுதி
ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளைப் பின்பற்றி. அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வாளராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். (இல்லையெனில்) வரையறுக்கப் பட்ட கல்வித் தகுதிகளுடன், ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (TET).இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ளவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் மேற்கண்ட இந்த தற்காலிக பணி நியமனமானது. நியமனம் செய்யப்படும் நாள்முதல் ஏப்ரல்-2023 மாதம் வரை உள்ள மாதங்களுக்கு மட்டுமே நியமனம் செய்யப்படும். அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், அரியலூர் மற்றும் உடையார்பாளையம் ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சியர் அலுவலகங்களை அணுகி காலிப்பணியிட விவரங்களை தெரிந்து கொண்டு அந்த பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட காலிப்பணியடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணத்தினை உரிய கல்வித் தகுதி சான்றாவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அனுப்ப வேண்டிய முகவரி பற்றியும் முழு விவரங்கள்:
அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அறை எண்: 35-ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 18.01.2023 மாலை 5.45-க்குள் ஒப்படைத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்