Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளிகளில் 9000 காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்கள் தேவை- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

Teacher 9000 vacancy


தமிழகத்தில் ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை  ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்று காண தேர்வு நடைபெற்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.


மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் IIக்கான தேர்வு பிப்ரவரியில் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் திருவாரூரில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு 9 ஆயிரம் ஆசிரியர்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments