தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் நுழைவுத் தேர்வுகள் எழுதி உயர்கல்வி படிப்புகள் தொடரச்செய்ய வேண்டும் என்கின்ற நோக்கில் அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு பல்வேறு முன்னேடுப்புகள் பள்ளிக் கல்வித் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆர்வமுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் சரியான நேரத்தில் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க எதுவாக விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க தொடங்கும் நாள் முடிவடையும் நாள், கட்டணவிவரம் போன்றவற்றுடன் தொடர்புடைய தேர்வு சார்ந்த தகவல்கள் பார்வையில் காணும் கடிதத்தின் வாயிலாக அனைத்து மாவட்டங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த National ServiceScheme(NSS) மாவட்ட தொடர்பு அலுவலர்கள் (District Liaison Officer | வாயிலாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகின்ற 04.012023 ஆம் தேதி முதல் நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு உதவுவார்கள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்