Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான திருப்புதல் தேர்வு- பொதுவான அறிவுரைகள்

அனைத்து வகை அரசு / உதவிபெறும் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாக வினாத்தாட்கள் வழங்கப்படும்.

தேர்வு நாட்களுக்குரிய வினாத்தாட்களை பெற தங்கள் பள்ளி சார்பாக பொறுப்பான ஒரு நபரை தேர்ந்தெடுத்து, அவரது கைப்பேசி எண் உள்ளிட்ட விவரத்தினை சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளித் தலைமை ஆசிரியருக்கு முன்கூட்டியே தெரிவித்தல் வேண்டும்.

திருப்புதல் தேர்வு கால அட்டவணையின்படி, தங்கள் பள்ளி சார்பாக அனுமதிக்கப்பட்ட நபர், சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளி தலைமையாசிரியரை அணுகி, அந்தந்த தேர்வு நாட்களுக்குரிய வினாத்தாட்களை தேர்வு நாளன்று காலை மந்தண முறையில் பெற்று உரிய நேரத்திற்குள் மாணவர்களுக்கு வழங்கி தேர்வுகளை எவ்வித புகார்களுக்கு இடமளிக்காமல் சிறப்பான முறையில் நடத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஒவ்வொரு நாள் தேர்வு முடிந்ததும் அடுத்த நாள் தேர்வுக்கு மாணவர்களை முழுமையாக தயார்படுத்தும் வகையில் திட்டமிட வேண்டும்.


 வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளித் தலைமை ஆசிரியர், ஒவ்வொரு நாளும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் வினாத்தாட்களின் எண்ணிக்கை விவரம் (வகுப்பு வாரியாக / பாட வாரியாக), வழங்கப்பட்ட நேரம் மற்றும் பெற்றுக்கொள்பவரின் கையொப்பம் ஆகிய விவரங்கள் அடங்கிய பதிவேட்டினைப் பராமரித்தல் வேண்டும்.

Post a Comment

0 Comments