திருநெல்வேலி காவல் சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் அண்டை மாநிலங்களிலிருந்து கோழி கழிவுகள், மீன் கழிவுகள், மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகள் போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய கழிவுகளை யாரேனும் வாகனத்தில் ஏற்றி வந்து கொட்டினாலோ அல்லது ஏஜென்டுகள் மூலம் கழிவுகளை வாகனத்தில் கொண்டு வந்து சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் குழி தோண்டி புதைத்தாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், இடத்தின் உரிமையாளர்கள் மீதும் மற்றும் வாகன ஓட்டுநர்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு காய்கறி கொண்டு செல்லும் வாகனங்கள் காய்கறிகளை இறக்கிவிட்டு பின்னர் திரும்பி வரும்போது வாகனத்தின் உரிமையாளர்களுக்கே சில சமயங்களில் தகவல் தெரிவிக்காமல் மேற்படி கழிவுகளை கொண்டு வந்து சரகத்திற்குள் கொண்டு வருவதாக தெரியவருகிறது. இவ்வாறு மேற்படி கழிவுகளை யாரேனும் மாவட்டத்திற்குள் கொண்டுவருவது தெரியவந்தாலோ அல்லது கழிவுகளை கொட்டினாலோ கீழ் கண்ட எண்ணிற்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கலாம் எனவும் அல்லது WhatsApp- மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்று திருநெல்வேலி சரக துணை தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகம்: 0462-2906025 Hello Police (WhatsApp) :9952740740
தென்காசி மாவட்ட காவல் அலுவலகம்: 9489003324, WhatsApp - 9385678039
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகம்: 0461-2340200, Hello Police (WhatsApp) - 9514144100
கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகம்: 04652-220167, WhatsApp -7010363173
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்