Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

2022 2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு ,மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவேற்றம் செய்தல்-கூடுதலாக கால அவகாசம் வழங்குதல்

2022-2023-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணாக்கரது விவரங்களை 14.12.2022 முதல் 23.12.2022 வரையிலான நாட்களில் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யுமாறுஅறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் ஒரு சில பள்ளிகளின் மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் ஏற்படுகின்றன எனத் தெரியவருவதால், பத்தாம்வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம்செய்வதற்கு 28.12.2022 வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதுவே, பத்தாம் வருப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணிக்காக வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும். இதன்பின்னர். இப்பணிக்காக எக்காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது.

Post a Comment

0 Comments