Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பதிவுத்துறை 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு - ஆவண எழுத்தர்களுக்கு உரிமம் வழங்க தேர்வு-நடைமுறைகள்- ஆணை வெளியீடு

2022-2023ஆம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை தொடர்பான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் கீழ்காணும் அறிவிப்பினை செய்துள்ளார்:-

"தமிழகத்தில் 1998-க்கு பின்னர் புதியதாக ஆவண எழுத்தர் உரிமங்கள் வழங்கப்படவில்லை. பதிவுக்கு வரும் ஆவணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கூடுதல் ஆவண எழுத்தர்களை நியமிக்க வேண்டிய நிலை எழுந்துள்ளதைக் கருத்தில் கொண்டு உரிய அமைப்பு மூலம் சிறப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு ஆவண எழுத்தர்களுக்கான புதிய உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் ஏறத்தாழ 20,000 நபர்கள் பயன் பெறுவர்.

2 மாண்புமிகு அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, பார்வை ஒன்றில் படிக்கப்பட்ட கடிதங்களின் வழி பெறப்பட்ட பதிவுத்துறை தலைவரின் கருத்துருவை ஏற்று புதிதாக ஆவண எழுத்தர் உரிமங்களை கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றி வழங்க பதிவுத்துறை தலைவருக்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது.

Post a Comment

0 Comments