மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் 2022-23-ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களில் முறையான நியமனம் செய்யப்படும் வரை அல்லது கல்வியாண்டின் இறுதி நாள் வரை, இவற்றுள் எது முந்தையதோ, அதுவரை தற்காலிகமாக சுழற்சி-1-ல் ஏற்கனவே (2021-22) அனுமதிக்கப்பட்ட 2423 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த அனுமதியும், அதற்கான செலவினமாக ஒரு கௌரவ விரிவுரையாளருக்கு மாதம் ஒன்றிற்கு ஊதியமாக ரூ.20,000/- வீதம் 11 மாதங்களுக்கு ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை (ஜூன் 2022 தவிர்த்து) ரூ.53,30,60,000/- (ஐம்பத்து மூன்று கோடியே முப்பது இலட்சத்து அறுபதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பும் செய்து ஆணையிடப்பட்டது.
2.அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களில் உதவிப் பேராசிரியர்களையும், கௌரவ விரிவுரையாளர்களையும் நியமனம் செய்வது தொடர்பாக, மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் 07.07.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக உதவிப் பேராசிரியர்களை நேரடி நியமனம் செய்வதற்கு காலதாமதமாகுமென்பதால் மாணவர்களின் நலன் கருதி இடைக்கால நடவடிக்கையாக, 2022-23-ஆம் கல்வியாண்டில், சார்ந்த மண்டல இணை இயக்குநர் வழியாக கூடுதலாக 1895 கௌரவ விரிவுரையாளர்களை சுழற்சி 1-ல் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் தற்காலிகமாக 11 மாதங்களுக்கு நியமனம் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது.
3.மேற்காணும் தீர்மானத்தின் அடிப்படையில் கல்லூரிக் கல்வி இயக்குநர் மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தற்போது அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 7198 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 5303 கௌரவ விரிவுரையாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருவதாகவும், மீதமுள்ள 1895 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், மாணாக்கர்களுக்கு வகுப்பு நடத்துவது மிகவும் சிரமமாக இருப்பதாகவும், மாணாக்கர்களுக்கு தரமான தோற்றுவிக்கப்பட்ட நிலையிலும், உடனடியாக 1895 கௌரவ கல்வியினை வழங்குவதற்கும். கூடுதலாக கல்லூரிகள் விரிவுரையாளர்களை நியமனம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளார்.
4. மேலும், மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கூட்டக் குறிப்புரையின்படி, அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக நேரடி உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரை. மாணாக்கர்களின் நலன் கருதி, 1895 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களை கீழ்க்கண்டவாறு நியமனம் செய்யலாம் எனவும் பரிந்துரைத்துள்ளார்:-
கௌரவ விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் / விண்ணப்பங்கள், சார்ந்த மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரால் மட்டுமே அறிவிக்கப்பட வேண்டும்.
பல்கலைக்கழக மாணியக்குழு ஒழுங்குமுறைகள் 2018-ன்படி உரிய கல்வித் தகுதி பெற்றுள்ளவர்கள் மட்டுமே தகுதியுடையவராக கருதப்படுவர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்