Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசு பள்ளிகளில் மிஷன் இயற்கை- வழிகாட்டுதல்கள் வெளியீடு

அரசு பள்ளிகளில் மிஷின் இயற்கை என்ற திட்டம்:

தமிழக அரசுப் பள்ளிகளில் 'மிஷன் இயற்கை' என்ற பெயரிலான சுற்றுச்சூழல் திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டுதல்கள் வெளி யிடப்பட்டுள்ளன.

இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 'மிஷன் இயற்கை' என்ற சுற்றுச்சூழல் திட்டத்தை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த பள்ளிக்கல் வித் துறை திட்டமிட்டுள்ளது.

இதற்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி கடந்த அக். 28-இல் கோவையில் நடைபெற்றது. தொடர்ந்து அரசுப் பள்ளிக ளில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு முறைகள் தற்போது வெளியிடப்படுகின்றன.

அதன்படி, அனைத்து தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளிகளில் இருந்து ஒரு சுற்றுச்சூழல் ஆசிரியரை தேர்வு செய்து அதன் விவரங் களை சமர்ப்பிக்க வேண்டும். அவர்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் வழியாக அடுத்த வாரத்தில் ஒருநாள் பயிற்சி அளிக்கப்படும். இந்த திட்டத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஈடு படுத்தலாம். இதற்காக ஒவ்வொரு பள்ளியில் இருந்து தலா 5 மாணவர் களை தேர்வு செய்ய வேண்டும்.

முதல்வரிடம் விருதுகள்: இத்திட்டத்தில் சிறப்பாக செயல்படும் 5 பள்ளிகள், 25 மாணவர்களை மாநில அளவில் தேர்வு செய்து பிப்ரவரி மாத இறுதியில் முதல்வரால் விருதுகள் வழங்கப்படும். இதன் நோக்கங்கள் மற்றம் செயல்முறைகள் அடங்கிய விவரம் மிஷன் இயற்கை கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கையேடு இணைய வழி | யில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். இதையடுத்து உரிய வழிமுறைகளை பின்பற்றி மிஷன் இயற்கை திட்டத்தை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments