Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

RTE APPLY ONLINE 2025 -கட்டாய கல்வி - மாணவர் சேர்க்கை தொடக்கம் - முழு விவரங்கள்

 கட்டாய கல்வி - மாணவர் சேர்க்கை இன்று தொடக்கம்...
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை இன்று தொடக்கம்...

ஏற்கனவே பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் மூலமாக இடஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்...

http://rteadmission@tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசு தமிழகத்திற்கு நிலுவை தொகையை விடுவிக்காமல் இருந்ததால் மாணவர் சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டது..

ஒன்றிய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-26 கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி (RTE) மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE Act) -இன் கீழ் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது.

மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னணி

W.P. No. 18427 of 2025 V. Eswaran vs. Government of Tamil Nadu & Others வழக்கில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம், RTE நிதி ஒதுக்கீட்டை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (Samagra Shiksha) திட்டத்திலிருந்து பிரித்து வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) அல்லது PM SHRI பள்ளித் திட்ட ஒப்பந்தம் (MoU) என்பனவற்றுடன் நிதி வழங்கல் இணைக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு மனு (SLP) தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவிப்பு வழங்கியதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு தன்னுடைய நிதிப் பங்களிப்பை விடுவித்துள்ளது. இதன் கல்வியாண்டிற்கான RTE மாணவர் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 2025-26 சேர்க்கை நடைமுறைகள்

2025-26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை சிறப்பம்சங்கள்

1. சேர்க்கை ஒதுக்கீடு

2. அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில் (LKG / I std) 25% ஒதுக்கீடு.

3.சேர்க்கை நடைமுறைகள் RTE Act, 2009 மற்றும் தமிழ்நாடு RTE விதிகள், 2011 அடிப்படையில் நடைபெறும்.

2. சேர்க்கை முறை

o அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் சேர்க்கை.

தற்போது குழந்தைகள் நுழைவு நிலை வகுப்பில் கல்வி பயிலும் அதே பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான சேர்க்கை மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே சேர்க்கப்பட்ட தகுதியான மாணவர்களை RTE ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்வதற்காக 10 நாள் கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

3. முன்னுரிமை பிரிவுகள்

o ஆதரவற்றோர்

எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர்

o மாற்றுப் பாலினத்தவர்

0 தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள்

o மாற்றுத் திறனாளிகள்

ஒதுக்கீட்டை விட விண்ணப்பங்கள் அதிகமானால், குலுக்கல் நடைமுறை (Random Selection) பின்பற்றப்படும்.

4. வசூலித்தக் கட்டணத்தை திருப்பிச் செலுத்தல்

RTE தகுதியுடைய மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

5. கண்காணிப்பு மற்றும் புகார் தீர்வு

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழுக்கள் மூலம் கண்காணிப்பு.

புகார்களுக்காக பிரத்தியேகமான உதவி எண் மற்றும் மின்னஞ்சல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

6. கல்வி சமத்துவம் மற்றும் அணுகலை உறுதி செய்தல்

© தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், இச்சேர்க்கை நடைமுறையை தெளிவான, சமத்துவமான மற்றும் குழந்தை மையப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்கிறது.



Post a Comment

0 Comments