தமிழ்நாட்டில் காலியாக உள்ள PG TRB EXAM பணியிடங்களுக்கு October 12ந் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என TEACHER RECRUITMENT BOARD கடந்த JULY மாதம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அதில் New syllabus அடிப்படையில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, இந்த தேர்வு உத்தேசமாக November மாதம் முன்கூட்டியே நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்களால் தேர்வுக்கு தயாராக முடியவில்லை என்றும் தேர்வினை தள்ளி வைக்கவேண்டும் என்றும் விண்ணப்பதாரர்கள் பல சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதனை தொடர்ந்து வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வுக்கு விண்ணப்பத்திருந்த 2 லட்சத்து 36 ஆயிரத்திற்கு மேற்பட்டருக்கு Hall ticket தயாரிக்கப்பட்டதாகவும், omr விடைத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிமன்றம் PG TRB EXAM எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது. எனவே, ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்படாது, நாளை மறுநாள் திட்டப்படி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெறும் என்று உத்தரவிட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்