Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளிகளில் சுதந்திர தின விழா: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிகளில் சுதந்திர தின விழா: வழிகாட்டுதல்கள் வெளியீடு
தமிழகத் தில் அனைத்து வகையான பள் ளிகளிலும் சுதந்திர தின விழா கொண்டாடுவது தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல் வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்களுக் கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றிக்கை:

நாட்டின் சுதந்திர தின விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகி றது. இதையடுத்து அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியும், எழுச்சியும் மிக்க நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்க ளால் அலங்காரம் செய்து தேசி யக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும்.

இதுதவிர ஊராட்சி மன்ற நிர் வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், புரவலர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்குபெற செய்ய வேண்டும். நெகிழி வகை தேசியக் கொடிகளைப் பயன்படுத் தக்கூடாது. அதேபோல், தேசி யக் கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக் கூடாது. இதுசார்ந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments