Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

Latest Local Holiday: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு || 23.07.2025 - எந்த மாவட்டம்?

Latest Local Holiday: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு || 23.07.2025 - எந்த மாவட்டம்?
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், குருவாலப்பர்கோவில் கிராமம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் UNESCO-வால் உலக பிரதான பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை ஆண்டுதோறும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மூலமாக அரசு விழாவாக நடத்திட பார்வை 2-ல் காணும் அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பார்வை 1-ல் காணும் அரசாணையின்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ள ஆடி திருவாதிரை விழாவினை முன்னிட்டு வருகிற 23.07.2025 (புதன் கிழமை) அன்று அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவித்து ஆணையிடப்படுகிறது.

1. அரியலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இது பொருந்தும், இருப்பினும் இந்த உர்ளூர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித் தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு (மெட்ரிக், ஆங்கிலோ இண்டியன் பள்ளித்தேர்வுகள் உட்பட) பொருந்தாது. அவை ஏற்கனவே அரசால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

2. 23.07.2025 (புதன் கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அனுசரிப்பதால், அதனை ஈடுசெய்யும் பொருட்டு 26.07.2025 (சனிக்கிழமை) அன்று முழுவேலை நாள் எனவும் ஆணையிடப்படுகிறது.

3. மேலும் பத்தி 1-ல் அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையானது செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும் மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments