இந்தியாவில் மக்கள் அனைவரும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பணத்தை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் Google pay, phone pe, Paytm போன்ற அப்ளிகேஷன் மூலமாக அதாவது யுபிஐ செயலி மூலமாக ஒருவருக்கு எளிதில் பணம் அனுப்பவும், பெறவும் செய்கின்றனர். யுபிஐ செயலி தற்போது அனைத்து மக்களிடமும் ஒரு அத்தியாவசிய பொருளாகிவிட்டது.
UPI செயலிகளை NPCI என்ற அமைப்பு நிர்வகத்து வருகிறது. இந்த சேவைகளின் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய மாற்றங்களை ஆகஸ்டு ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வருகிறது.
என்னென்ன மாற்றங்கள் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு நடைமுறைக்கு வருகிறது என்பது பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:
யுபிஐ செயலி மூலம் ஒருவருக்கு பண பரிவர்த்தனை செய்யும் பொழுது Pending இருந்தால் அதன் ஸ்டேட்டஸை மூன்று முறை மட்டுமே பார்க்க முடியும் அதாவது ஒவ்வொரு முயற்சிக்கும் 90 நொடிகள் இடைவெளியில் தான் அதை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்குகளில் உள்ள இருப்புத் தொகையை பார்ப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது யுபிஐ செய்திகள் மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே Balance செக் செய்ய முடியும்.
மேலும் தங்கள் வங்கிகள் குறித்த விபரங்கள் தகவல்களை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 25 முறை மட்டுமே பயனாளிகள் பெற முடியும்.
பயனாளர்கள் நெட்ப்ளிக்ஸ், spotify, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றுக்கான ஆட்டோ பேமென்ட் முறைக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 10 மணிக்கு முன், மதியம் ஒரு மணி முதல் 5 மணி வரை பின்னர் இரவு 9:30 மணிக்குப் பின் மட்டுமே இந்த ஆட்டோ டெபிட் நடைமுறை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்