Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TRB LATEST NEWS - DIRECT RECRUITMENT FOR THE POST OF SECONDARY GRADE TEACHERS - 2024 - PROVISIONAL SELECTION LIST

TRB LATEST NEWS - DIRECT RECRUITMENT FOR THE POST OF SECONDARY GRADE TEACHERS - 2024 - PROVISIONAL SELECTION LIST 
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண். 01/2024 நாள் 09.02.2024 ன் படி, இடைநிலை ஆசிரியர் தெரிவிற்கு பணிநாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு போட்டித்தேர்வு 2107.2024 அன்று நடத்தப்பட்டது. மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தினால் வழக்கு. WMP.No. 16353/2024 6 18.03.2025 அன்று வழங்கப்பட்ட இடைக்காலத் தீர்ப்பாணையின்படி தமிழ் வழித் தேர்வர்களுக்கு மட்டும் தேர்வு முடிவுகள் மற்றும் இறுதி விடைக்குறிப்பு இவ்வாரியத்தால் 12.04.2025 அன்று வெயிடப்பட்டது.

தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்களிலிருந்து அறிவிக்கையின்படி, 1:1.25 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் 30.04.2025 அன்றும், கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் 13.05.2025 அன்றும் இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டது. இப்பட்டியலிகளின்படி 12052025 முதல் 14.05.2025 வரையிலும் மற்றும் 16.05.2025 அன்றும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. மேலும், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாத பணிநாடுநர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு 22.05.2025 அன்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்த்தலின் போது பணிநாடுநர்கள் சமர்ப்பித்த கல்விச் சான்றிதழ்கள், ஆசிரியர் தகுதிச் தேர்வு சான்றிதழ் மற்றும் இதர முக்கிய ஆவணங்கள், பணிநாடுநர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் தெரிவு நடைமுறை விதிகளை பின்பற்றி தகுதிவாய்ந்த பணிநாடுநர்களைக் கொண்டு இனச்சுழற்சி மற்றும் இதர அரசாணைகளின்படி தமிழ்வழி காலிப்பணியிடங்களுக்கு மட்டும் தற்காலிகத் தெரிவர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இன்று (3105,2025) வெளியிடப்படுகிறது. தற்காலிகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பணிநாடுநர்களுக்கு அவர்கள் சார்ந்த பயன்பாட்டுத் துறைகளின் மூலம் பணிநியமன ஆணைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்


Post a Comment

0 Comments