Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Israel Iran war New Update - இஸ்ரேல் ஈரான் போர் - புதிய தகவல் வெளியீடு

Israel Iran war New Update - இஸ்ரேல் ஈரான் போர் - புதிய தகவல் வெளியீடு 
ஈரான்- இஸ்ரேல் இடையே, 10 நாட்களாக சண்டை நடக்கிறது. இரு நாடுகளிலும் உள்ள வெளிநாட்டவர்கள் அவசரமாக சொந்த நாட்டுக்கு திரும்புகின்றனர்.

'அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை ஈரான் முற்றிலுமாக கைவிடாத வரையில், போரை நிறுத்த மாட்டோம்' என்று இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களம் இறங்கியது.

பதிலடியில் அமெரிக்கா கதறும் என்கிறது ஈரான் “ஈரானில் உள்ள மூன்று முதன்மையான அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளோம்,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.


மூன்று நிலையங்களும் செயலிழந்ததாக அவர் தெரிவித்தார். இஸ்ரேலின் நீண்ட கால எதிரியான ஈரானுக்கு ஆதரவாக இருந்து வரும் ரஷ்யா, சீனா, துருக்கி போன்ற நாடுகள் அமெரிக்காவை பலமாக கண்டித்துள்ளன.

இந்நிலையில், ஈரான் நாட்டில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானில் ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இஸ்ரேல் அரசின் பாதுகாப்பை உறுதி செய்ய, தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரானின் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள 6 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்;

மெஹ்ராபாத், மஷாத், டெஸ்புல் உள்ளிட்ட விமான நிலையங்களில் நடைபெற்ற தாக்குதலில் F-14, F-5, AH -1 உள்ளிட்ட உயர்ரக விமானங்கள் பலத்த சேதமடைந்ததாக தகவல்.

இஸ்ரேல் - ஈரான் போர்

ஹார்முஸ் ஜலசந்தியை கையில் எடுத்த ஈரான்..!

உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழிகளில் ஒன்றுதான் இந்த ஹார்முஸ் ஜலசந்தி

மத்திய கிழக்கு வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கும் ஒரு குறுகிய நீர்வழி

நீர்வழியில் மிக குறுகலான இடத்தில் 33 கி.மீ. அகலம் மட்டுமே கொண்டது

உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 26% ஹார்முஸ் ஜலசந்தியை சார்ந்தே உள்ளது


ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையில் ஒரு குறுகிய கடல் வழித்தடம் இதுவாகும்

சவுதி அரேபியா, ஈராக், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஈரான் போன்ற நாடுகளுக்கு முதன்மை ஏற்றுமதி பாதை

இந்த பாதை மூடப்பட்டால் உலகின் பொருளாதாரம் சில வாரங்களில் அதல பாதாளத்திற்கு செல்லும் என சர்வதேச எரிசக்தி நிறுவனம்(IEA) எச்சரிக்கை.

ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் இந்தியா அதிக ஆபத்தை சந்திக்கும்.

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் எதிரொலியாக கத்தார் நாடு தனது வான்வெளியை தற்காலிகமாக மூடுவதாக அறிவிப்பு.

கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை ஈரான் தாக்கலாம் என்ற தகவலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

கத்தாரில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரானின் தாக்குதல் எதிரொலியாக,

கத்தாரில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், வீட்டிலேயே இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுவதாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு.

Post a Comment

0 Comments