Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

உண்டு உறைவிட பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை-தமிழ், கணிதம்,அறிவியல், சமூக அறிவியல்

உண்டு உறைவிட பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை-தமிழ், கணிதம்,அறிவியல், சமூக அறிவியல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் பணிபுரிய தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட பெண் ஆசிரியர்கள் 30.06.2025-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் (NGO) செயல்படுத்தப்படும் KGBV கொல்லப்பள்ளி, KGBV தளிகொத்தனுார், KGBV தேன்கனிக்கோட்டை, NSCBAV கக்கதாசம், NSCBAV தேன்கனிக்கோட்டை, NSCBAV அத்திமுகம் ஆகிய உண்டு உறைவிடப் பள்ளிகளில் பணிபுரிய தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட பெண் ஆசிரியர்கள் தேவை.

நிபந்தனைகள்:

1. மேற்குறிப்பிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது.

2. உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கி பணிபுரிய வேண்டும்.

3. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

4. கல்வித் தகுதி : சம்மந்தப்பட்ட பாடத்தில் UG degree with B.Ed., & TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனைத்து சான்றுகள் (நகல்) மற்றும் அனுபவ சான்றுகளுடன் KGBV உண்டு உறைவிடப் பள்ளி, போலுப்பள்ளி, கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி மாவட்டம். செல் :9080470598, 7373152380 என்ற முகவரிக்கு 30.06.2025 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments