Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

உபரி ஆசிரியர்கள் பணி நிரவல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

உபரி ஆசிரியர்கள் பணி நிரவல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில்

(2024-2025) அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வது தொடர்பான வழி காட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டிருக் கிறது.

அதன்படி, உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப் பட வேண்டியவராக இருந்து 40 சதவீதம் பார்வைக் குறைபாடுடையவராக இருந்தால் அவருக்கு அதில் விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல், தேசிய மாண வர் படை அதிகாரியாக இருந்தால் அவருக்கும் விலக்கு அளிக்க வேண்டும்.

உபரி ஆசிரியர்கள் விவரங்களையும், பள்ளி நிர்வாகத் தின்மூலம் பணி நிரவல் செய்து மாறுதல் ஆணை வழங் கப்பட்ட விவரங்களையும் முதன்மைக் கல்வி அலுவலரி டம் அந்தந்த பள்ளிகள் தெரிவிக்க வேண்டும்.

பணி நிரவல் செய்யப்பட்ட விவரங்கள் எமிஸ் தளத் தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சிறுபான்மை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை பொறுத்தவரையில், உபரி ஆசிரியர்களை அதே வகையி லான பிற சிறுபான்மை பள்ளிகளில் பணி நிரவல் நடவ டிக்கை செய்திடவேண்டும்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் பதிவேற் றம் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில், மே இறுதி வாரத்தில் வருவாய் மாவட்டத்துக்குள் பணி நிர வல் கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும், அதனைத் தொடர்ந்து அரசாணை எண் 146-இல் தெரிவிக்கப்பட் டுள்ள நெறிமுறைகளின்படி தொடர் பணிநிரவல் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முதன் மைக் கல்வி அலுவலர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத் தியுள்ளது.

Post a Comment

0 Comments