Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

School Open: கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? - அறிவிப்பு

School Open: கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? - அறிவிப்பு


ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும்; 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதித்தேர்வு நாளையுடன் முடிவடைகிறது -பள்ளிக் கல்வித்துறை

பள்ளி திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு 24.04.2025 அன்று முடிவடைய உள்ளது. 25,04.2025 முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணியிணை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் 30-04.2025 எனத் தெரிவிக்கப்படுகிறது.

2025-2026 ஆம் கல்வியாண்டில், 02.06.2025 (திங்கள் கிழமை) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே. 02.06.2025 அன்று பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments