ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06.
பத்திரிகைச்செய்தி
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் UGC வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் மாநிலத் தகுதித் தேர்வு (TNSET) கணினி வழித் தேர்வுகள் (Computer Based Examination), 06.03.2025 07.03.2025 08.03.2025 மற்றும் 09.032025 ஆகிய நாட்களில் காலை மாலை இருவேளைகளில் நடத்தி முடிக்கப்பட்டது.
தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Key Answers) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான https://trb.tn.gov.in/-ல் வெளியிடப்படுகின்றன.
தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த அமர்வில் (Session) தேர்வு எழுதினார்களோ அந்த அமர்வுக்கு உரிய Master Question Paper TRB website வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணைய வழியில் ஆட்சேபனை (objection) தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி சான்றாவணங்கள் அதற்குரிய இணைக்கப்படாத சான்றாவணங்களை முறையீடுகள் இணைக்கவேண்டும். பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவையனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக் குறிப்பின் மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் 13.03.2025 முதல் 15.03.2025 வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும். Standard பாடப்புத்தகங்கள் மட்டுமே ஆதாரமாக அளிக்கவேண்டும். கையேடுகள் (Guides, Notes) மற்றும் இணைய வழி ஆவணங்கள் ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது, அவை நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். மேலும். பாடவல்லுநர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்