Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

TET NEWS - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சுப் பணியாளர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் காலிப்பணியிடங்களில் 2 விழுக்காடு பணியிடங்களை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களில் பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் பணிக்கு தகுதிபடைத்த பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் நியமனம் வழங்கிட பார்வை-1ல் காணும் அரசாணையில் ஆணை பெறப்பட்டுள்ளது.
2) பார்வை-2ல் காணும் அரசாணையில் பத்தி-4ல் பதவி உயர்வுக்கான பணியிடங்களை நிறைவு செய்யும்போது சிறப்பு / பொது விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்படவேண்டும். வெளியிடப்பட்டுள்ள நிர்வாக ஆணைகளி (Executive வழங்கப்படக்கூடாது Orders) அடிப்படையில் பதவி உயர்வுகள் தெரிவித்துள்ளதையடுத்து மேற்காண் அமைச்சுப்பணியாளர்களுக்கு 2014-2015 முதல் 2 விழுக்காடு பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான பணிமாறுதல் ஆணைகள் வழங்கப்படவில்லை.

3) இதனைத் தொடர்ந்து மேற்படி பொருள் சார்பாக விதிதிருத்தம் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பியதையடுத்து பார்வை-3ல் காணும் அரசாணையின்படி விதிதிருத்தம் மேற்கொள்ளப்பட்டு Ro-issue of Special Rules ஆணை வெளியிடப்பட்டது.

4) 2017ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை விட பணிநிரவல் செய்யப்படவேண்டிய உபரி ஆசிரியர்கள் அதிகமாக இருந்ததால் அனைத்து பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களும் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் (Deployement) செய்வதற்கே போதுமானதாக இல்லை. அதனால் அனைத்து காலிப்பணியிடங்களும் (ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான 2 விழுக்காடு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்கள் உட்பட) பணிநிரவலில் பூர்த்தி செய்யப்பட்டதால் உத்தேச காலிப்பணியிட மதிப்பீடு தயாரிக்க வேண்டிய நிலையே ஏற்படவில்லை. அதனால் 2017-18 முதல் 2022-23 முடிய இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வே வழங்கப்படாத நிலையில் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வுக்கு 2 விழுக்காடு ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை.

5) பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களில் அமைச்சுப்பணியாளர்களுக்கு 2 விழுக்காடு மூலம் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல் அளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் வழங்கப்பட்ட பார்வை-6ல் 21.03.2025 நாளிட்ட தீர்ப்பில் பத்தி 27ல் கீழ்க்காணுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

"27. in the light of the above discussion, all these writ petitions are disposed of with a direction to the State Government and the Directorate of School Education to take inmunodiate steps to fit up the vacancies under the 2% category, both in the posts of B.T.Assistant/Graduate Teachers and P.G.Assistant from among the eligible candidates by drawing a panel for each year starting from 2007-08 and to issue appropriate orders within a period of six weeks from the date of receipt of a copy of this order. The remaining vacancies in the posts of B.T.Assistant/Graduate Teacher shall be filled up by direct recruitment as per the selection done under the notification issued by the Teachers Recruitment Board. The Teachers Recruitment Board has already completed the selection process and hence, the Board shall forward the list of selected candidates to the respective user Departments forthwith. Such appointment orders shall be issued after the completion of filling up vacancies under the 2% category for the posts of BT Assistant/Graduate Teack 2/5 Connected WMPs stand closed. There shall be no order as to costs."

6) மேற்காண் தீர்ப்பாணையின்படி 10.3.2003க்குப் பின்னர் உள்ள பணியாளர்களின் தெரிவுப் பட்டியல் Rule of reservation அடிப்படையில் அல்லாமல் Merit Basis (Marks obtained in competitive examination) வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளதாலும் பணியிடங்கள் வாரியாக (கண்காணிப்பாளர். உதவியாளர், இளநிலை உதவியாளர்) ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியல் மட்டுமே வெளியிட இயலும் என்ற நிலை உள்ளது.

7) மேலும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கு WA No.313 /2022 மற்றும் தொகுப்பு வழக்குகளில் 02.06.2023 நாளிட்ட தீர்ப்பாணையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தீர்ப்பாணை வழங்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற அமைச்சுப்பணியாளர்களின் பெயர்களை மட்டுமே இப்பட்டியலில் இடம் பெறவேண்டும்.

8) எனவே தங்கள் வருவாய் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களிலும் பணிபுரியும் அனைத்து அமைச்சுப் பணியாளர்களில் பட்டதாரி ஆசிரியர் /தமிழாசிரியர் பணிக்கு 01.01.2025ல் பட்டதாரி ஆசிரியர் பதவிக்குறிய கல்வித் தகுதி படைத்துள்ள கண்காணிப்பாளர்கள் இருக்கைப்பணி கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் நிலையில் பணிபுரிபவர்கள் சார்ந்த விவரங்களை தனித்தனியாக தயார் செய்து இத்துடன் இணைத்துள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தொகுப்பறிக்கையினை கீழ்க்கண்ட அறிவுரைகளை பின்பற்றி உரிய ஆவணங்களின் அடிப்படையில் சரிபார்த்து முதன்மைக் கல்வி அலுவலரின் மேலொப்பத்துடன் தனிநபர் மூலம் விவரங்களை ஒப்படைத்திட வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

1) பட்டியலில் இடம் பெறும் பணியாளர்கள் 31.12.2024 அன்று குறிப்பிட்ட பாடத்தில் இளங்கலைப் பட்டச்சான்றும், பி.எட். பட்டச்சான்றும் (குறைந்தபட்சம் Provisional Certificate ஆவது) வைத்திருக்கவேண்டும்.

ii) தற்போது வகிக்கும் பதவியில் பணிவரன்முறை, தகுதிக்காண் பருவம் ஆகியவற்றினை 31.12.2024 அன்றுக்குள் பூர்த்தி செய்திருக்கவேண்டும்.

前) வெளி மாநில சான்று எனில் உரிய அலுவலரால் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கவேண்டும்.

iv) பட்டியலில் இடம் பெறும் பணியாளர்கள் இடைநிலைக் கல்வி (SSLC) தேர்ச்சி பெற்று, மேல்நிலைக் கல்வி (+2) தேர்ச்சி பெற்று பின்னர் இளங்கலை பட்டம் (மூன்று ஆண்டுகள்) பெற்றிருக்கவேண்டும். மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெறாதவர்களை எக்காரணம் கொண்டும் பட்டியலில் சேர்க்கக்கூடாது. தற்போது கடைசியாக பெறப்பட்டுள்ள அரசாணை எண்.242 உயர்கல்வித் (பி1)துறை நாள்.18.12.2012ன்படி பதினோராம் வகுப்பு (Old SSLC) பின்பு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப்படிப்பு, பிறகு தொலைதூரக் கல்வி நிறுவனம் இளங்கலை (Open University) பட்டப்படிப்பு (11+2+3)ஆணை வெளியிடப்பட்டுள்ளதால் அவர்களை முன்னுரிமைப் தெரிவிக்கப்படுகிறது. பட்டியலில் சேர்த்துக்கொள்ளத்

v) பணியாளர்களின் பிறந்த தேதி. நியமன முறை, கடந்த 5 ஆண்டுகளில் தண்டனை ஏதும் பெற்றிருப்பின் அதன் விவரம், ஒழுங்கு நடவடிக்கை நிலுவையிருப்பின் அதன் விவரம். போன்றவற்றை உறுதி செய்து சரியாக அளிக்க வேண்டும்.

vi) ஓராண்டு இரட்டைப்பட்டம் பெற்றவர்கள் சார்பான சென்னை  உயர்நீதிமன்ற வழக்கு WA.No. 529 /2013 Batch case Judgement DL05.02.2014 நாளிட்ட தீர்ப்பில் ஓராண்டு இரட்டைப்பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வுக்கு தகுதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் 01.01.2025 ஆண்டுக்கான முன்னுரிமைப் பட்டியலில் அவ்வாறு பயின்றவர்களின் விவரங்கள் இடம் பெறக்கூடாது.



vii) ஆசிரியர் தகுதித் தேர்வு (TET passed certificate) தேர்ச்சி பெற்றமைக்கான சான்று.

9) முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்து பெறப்படும் பட்டியலில் இடம் பெற்றுள்ள பணியாளர்கள் மட்டுமே முன்னுரிமைப்படி பரிசிலிக்கப்பட்டு 01.01.2025 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் பட்டதாரி / தமிழாசிரியர் நியமனத்திற்கான முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறுவார்களாதலால், இப்பொருளில் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தி மேற்கூறிய அறிவுரைகளைப் பின்பற்றி பட்டதாரி ஆசிரியர் பதவிக்குத் தகுதியான அமைச்சுப்பணியாளர்களின் விவரப்பட்டியலை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் ஆங்கிலத்தில் எந்த ஒரு கலமும் விடுபடாமல் Excel Arial Font ல் தயாரித்து சி2 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் (esec2s1s2@gmail.com) அச்சு நகல் ஒன்றினையும் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பிரிவு உதவியாளர் மூலம் காலதாமதமின்றி இணை இயக்குநரிடம் (ப.தொ) 26.03.2025 அன்று மாலைக்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

10) இணைப்பில் வரையறுக்கப்பட்டுள்ள படிவத்தில் எந்த ஒரு கலமும் விடுபடாமல் தொகுப்பு பட்டியலை கண்காணிப்பாளர் / இருக்கைப்பணி கண்காணிப்பாளர் / உதவியாளர் / இளநிலை உதவியாளர் நிலையில் தனித்தனியாக தயார் செய்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேலொப்பமிட்டு மேற்கண்டவாறு இணை இயக்குநரிடம் (ப.தொ) நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மீளவும் அறிவுறுத்தப்படுகிறது.

11) பணிமாறுதல் மூலம் பட்டதாரி / தமிழாசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களின் பெயர் பட்டியல் தொகுக்கப்பட்டு, இந்த தொகுப்பு பட்டியலின் கீழ் இப்பட்டியலில் உள்ள பணியாளர்களைத் தவிர வேறு எந்த பணியாளர்களின் பெயரும் விடுபடவில்லை என்று முதன்மைக் கல்வி அலுவலரால் சான்றளிக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments