Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Local Holiday: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Local Holiday: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 
பார்வை 1-ல் காணும் அரசாணையின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வாண்டு கொண்டாடப்படவுள்ள மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு (புதன்கிழமை) அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 29.03.2025 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது

மேற்படி உள்ளூர் விடுமுறை நாள். செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை நாளான 12.03.2025 (புதன்கிழமை) அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கிடவும் ஆணையிடப்படுகிறது.

Post a Comment

0 Comments