Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாற்றுத்திறனாளி மாணவர்களின் கற்றல் அடைவு நிலையினை அறிவதற்கான ஆய்வு ( Endline Survey ) - Dir Proceedings

மாற்றுத்திறனாளி மாணவர்களின் கற்றல் அடைவு நிலையினை அறிவதற்கான ஆய்வு ( Endline Survey ) - Dir Proceedings
பார்வையில கண்டுள்ள கடிதங்களின்படி, 2022-23 ஆம் கல்வியாண்டில், 2 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு அடிப்படை ஆய்வும் (Baseline Survey). 2023-24ம் கல்வியாண்டின் முடிவில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நடுநிலை மதிப்பீடும் (Midline survey) தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் சிறப்பு பயிற்றுநர்கள் வாயிலாக நடத்தி, அதன் மூலம் இக்குழந்தைகளின் கற்றல் அடைவு நிலையினை அறிந்து அவர்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி நூல்கள் அச்சிட்டு வழங்கப்பட்டது.

அவ்வாறே, 2024-25ம் கல்வியாண்டின் முடிவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இறுதி மதிப்பீடு (Endline Survey) தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் சிறப்பு பயிற்றுநர்கள் வாயிலாக நடத்தி, அதன் மூலம் இக்குழந்தைகளின் கற்றல் அடைவு நிலையினை அறிந்து

அவர்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி நூல்கள் அச்சிட்டு 2025-26ல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இறுதி மதிப்பீட்டிற்கு. ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பாடவாரியான கேள்விகள் மற்றும் மாணவர்களின் பதில்களை குறிப்பதற்கான படிவங்களையே இந்த பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Post a Comment

0 Comments