Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சத்துணவு உதவியாளர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அரசு உத்தரவு - என்னென்ன தன்மைகள் முழு விவரங்கள்

சத்துணவு உதவியாளர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அரசு உத்தரவு - என்னென்ன தன்மைகள் முழு விவரங்கள்
சத்துணவு உதவியாளர் காலிப் பணி யிடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமிப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைச் செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் பிறப் பித்துள்ளார். அவரது உத்தரவு விவரம்: சத்துணவு உத வியாளர் பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட தற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை விலக்கி சத்துணவு உதவியாளர் பணிக்கான நேரடி நியமனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒ துக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப் படுகிறது.

என்னென்ன தன்மைகள்: சில தன்மைகளைக்

கொண்டு இருக்கக் கூடிய மாற்றுத் திறனாளிகள் சத்து ணவு அமைப்பாளராகவும், சமையல் உதவியாளர்களா கவும் நியமனம் செய்யப்படுவர்.

அதாவது, கண்ணாடி அணிந்து குறைந்த அளவி லான பார்வை, கேட்பதில் சிரமம் இருந்தாலும், கருவி களைப் பொருத்தி சரியாகக் கேட்கும் திறனைப் பெற்று இருக்க வேண்டும்.

குட்டையாக இருப்போர், அமிலவீச்சுக்கு தாக்கு தலுக்கு உள்ளானோர், இரண்டு கால்களும் பாதிக் கப்பட்டு மூன்று சக்கர வாகனத்தைப் பயன்படுத்து வோர், தொழுநோய் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் போன்ற தன்மைகளுடன் இருப்போரைக் கொண்டு சத் துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிகளில் 4 சத வீதகாலியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments