தமிழகத்தில் நேரடி நியமனம் மூலம் 7,783 அங் கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள் ளது.
இது நலத் சார்பில் வெளியிடப்படஉத்தரவு: மத்திய அரசு அங்கன்வாடி மையங் களில் சத்தான உணவு வழங்குவது டன் தரமான கல்வியை வழங்க புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அங்கன் வாடி மையங்களில் சத்தான உணவு டன் கற்பித்தல் திறன்களையும் மேம் படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள் ளது.
இதற்கு, அங்கன்வாடி பணியாளர் கள், உதவியாளர்களின் கல்வி நிலை மேம்பட்டதாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் இயக்குநர் சார்பில் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
மொத்தமாக 7,783 அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கலாம் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பரிந்துரைகளை ஏற்று, தமிழக அரசு சில உத்தரவுகளை வெளியிடுகிறது. 3,886 அங்கன்வாடி பணியா 91 தலா ரூ.7,700 தொகுப்பூ தியத்திலும், சிறிய அள விலான அங்கன்வாடிக ளில் பணியாற்ற 305 பணி யாளர்கள் ரூ.5,700 தொகுப்பூதி யத்திலும், அங்கன்வாடி உதவியாளர் கள் 3,592 பேர் ரூ.4,100 தொகுப்பூதி யத்திலும் நேரடி நியமனம் மூலமாக நியமனம் செய்யப்படுவர். ஓராண்டு கழித்து சிறப்பு காலமுறை ஊதியம்
அவர்களுக்கு வழங்கப்படும். வயது-கல்வித்தகுதி: காலிப்
பணியிடங்களை ஒவ்வொரு மாவட் டத்திலும் நிரப்புவதற்கான அதிகா ரம் பெற்றவராக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் இருப் பார். அங்கன்வாடி பணிக்கு விண் ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 25 நிறைவடைந்தும், 35 வய துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். கணவனை இழந்தவர்கள், கைவிடப் பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள்மற்றும் பழங்குடியினருக் கான வயது 40 வரை நீட்டிக் கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி பணி யாளர் பணிக்கு கட்டா யமாக பிளஸ் 2 தேர்ச்சி B பெற்றிருக்க வேண்டும். இது சிறிய அளவிலான அங் கன்வாடி மைய பணிக்கு விண் ணப்பிப்போருக்கும் பொருந்தும். காலிப் பணியிடங்களை நிரப்புவ தற்கான அறிவிப்பு செய்தித்தாள் களிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இணையதளம் (www.icds.tn.gov.in) வெளியிடப்படும்.
அங்கன்வாடி உதவியாளர்: அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண் ணப்பிப்போர் 20 வயதுக்கு குறை யாமலும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். கணவனை இழந் தோர், கைவிடப்பட்டோர், தாழ்த் தப்பட்டோர் மற்றும் பழங்குடியின ருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45. பத்தாம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்