Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர்கள் பிரம்பு வைத்திருக்கலாம் பயன்படுத்துவதில் கவனம் அவசியம்

கேரள மாநிலம் நெய்யாற்றின் கரையை சேர்ந்த ஆசிரியர் சிபின். இவர் 6ம் வகுப்பு மாணவர் ஒருவரை கம்பால் அடித்துள்ளார். இதனால், இவ ருக்கு எதிராக அந்த மாணவரின் பெற் றோர் அளித்த புகார் அடிப்படையில் விழிஞ்ஞம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் "கோரி ஐகோர்ட்டில் சிபின் மனுத்தாக் கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி குன்ஹிகிருஷ்ணன் முன்ஜாமீன் அளித்து பிறப்பித்த உத்தரவு:
ஆசிரியர்கள் கையில் பிரம்பு வைத் திருக்கலாம். அதை எப்போதும் பயன் படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆசிரியர்களுடன் பிரம்பு இருப்பது மாணவர் சமூகத்தில் ஒரு உளவியல் விளைவை உருவாக்கும். இதன் மூலம் மாண்வர்களை சமூக தீமைகள் செய்வதில் இருந்து விலக்கி வைக்க முடியும்.

பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் போது அல்லது ஒரு மாணவரின் ஒழுக்கம் மற்றும் நடத்தை தொடர்பாக, எந்தத் தீமையும் இல்லாமல் ஆசிரியர் தாக்கி னால், அதற்காக அவர் மீது குற்ற வியல் வழக்குத் தொடரப்படாமல் பாதுகாக் கப்பட வேண்டும்.

Post a Comment

0 Comments