Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC TODAY UPDATE - டிஎன்பிஎஸ்சி முக்கிய செய்தி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு அமைச்சுப் பணியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் தட்டச்சர் பணிக்கான சிறப்புப் போட்டித் தேர்வு (கணினி வழித் தேர்வு) கடந்த 08.02.2025 மு.ப. நடத்தப்பட்டது. இதில் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-11 (தொகுதி-IIA பணிகள்)- இல் அடங்கிய பதவிகளுக்கான முதன்மைதேர்வு கடந்த 08.02.2025 மு.ப. நடத்தப்பட்டது. இதில் பொதுத்தமிழ்/பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் அதாவது 26.02.2025 மாலை 5.45-க்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள "Answer Key Challenge" என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம். இதற்கான அறிவுரைகள் வழிமுறைகள் தேர்வாணைய இணைய தளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. அஞ்சல் வழியாகவும் மின்னஞ்சல் (www.tnpsc.gov.in) வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Post a Comment

0 Comments