Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பி.இ.-பி.எட். முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றலாம்: அரசாணை

பி.இ.-பி.எட். முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றலாம்: அரசாணை
பி.இ. பட்டத்துடன் பி.எட். முடித்தவர்கள் பள்ளிக ளில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிவதற்கு தகுதியானவர்கள் என்று உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து உயர் கல்வித் துறைச் செயலர் கே.கோபால் வெளியிட் டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.டெக்., எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பானது வேலைவாய்ப்பு வகையில் பி.இ. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புக்குச் சம் மானது.

இதேபோல்,பி.இ.படிப்பில் ஏதேனும் ஒருபிரிவில் பட்டம் பெற்றவர் கள் பி.எட். (இயற்பியல் அறிவியல்) முடித்திருந்தால் பள்ளிகளில் பட்ட தாரி ஆசிரியராக (இயற்பியல்) பணிபுரியலாம். அந்த ஆசிரியர்கள் பள் ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களைப் பயிற் றுவிக்கத் தகுதியானவர்களாவர் என அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments