பார்வையில் காணும் இவ்வலுவலகக் கடிதத்தில் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) 01.02.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது பாரத சாரணியர் இயக்கத்தின் வைரவிழா 28.01.2025 முதல் 03.02.2025 வரை மணப்பாறை திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளதால் மாணாக்கர்களின் நலன் கருதி, TRUST தேர்வு 08.02.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்வு தேதி மாற்றம் குறித்தான விவரத்தை விண்ணப்பித்த மாணாக்கர்கள் அறியும் வண்ணம், தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகளை வழங்கிட அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், புதிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை 03.02.2025 பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அவர்தம் மாணாக்கர்களுக்கு வழங்க அறிவுத்துவதோடு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் புதிய பெயர்ப் பட்டியலை பதிவிறக்கம் செய்திட அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்