Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

TET NEWS: ஆசிரியர் தகுதித் தேர்வு - இந்த ஆண்டு - ஆசிரியர்

TET NEWS: ஆசிரியர் தகுதித் தேர்வு - இந்த ஆண்டு - ஆசிரியர் தகவல்


தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித்தேர்வு (teacher eligibility test) நடத்தப்படாததால் புதிய தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்? என்று  (Teacher)ஆசிரியர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், B,ed முடித்த பட்டதாரி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித்தேர்வில் (Teacher eligibility test) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் உள்ள பள்ளிகளில் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு (CTET) தேர்ச்சி கட்டாயம் ஆகும். CTET தேர்வை மத்திய அரசு சார்பில் CBSE நடத்தி வருகிறது. மாநில அளவிலான TET தேர்வை அந்தந்த மாநிலத்தில் ஏதேனும் ஒரு தேர்வு அமைப்பு நடத்தும். அதன் படி, தமிழகத்தில் டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (TEACHER RECRUITMENT BOARD) நடத்துகிறது.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆசிரியர் தகுதித்தேர்வு ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், CBSE தேர்வு ஆண்டுக்கு 2 தடவை (ஜனவரி -டிசம்பர்) முறையாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் அதற்கு நேர் மாறாக ஆண்டுக்கு ஒரு தடவை TEACHER ELIGIBILITY TEST தேர்வு நடத்தப்பட்டாலே பெரிய விஷயமாக கருதப்படுகிறது. கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெட் தேர்வு நடத்தப்பட்
டது. அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகாலமாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை.

கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் TET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடத்தப்படும் என டிஆர்பி 2024 வருடாந்திர தேர்வு அட்டவணையில் தெரிவித்திருந்தது. ஆனால் 2024-ம் ஆண்டு கடந்து புத்தாண்டு பிறந்தும் இன்னும் டெட் தேர்வுக்கான அறிவிப்புகூட வெளியிடப்படவில்லை.

இதனால் பிஎட் பட்டதாரிகளும், இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்த ஆசிரியர்களும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளனர். காரணம், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அரசு பள்ளிகளில் அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் எப்படியும் ஆசிரியர் பணியில் சேர்ந்துவிடலாம் என்பதுதான்.

தற்போது அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கும் டெட் தேர்ச்சி கட்டாயம் என்பதால் டெட் தேர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பணியில் உள்ள ஆசிரியர்களும் TRB-யின் நடவடிக்கையால் மனச்சோர்வு அடைந்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "டெட்தேர்வு நடத்துவதற்கு அரசின் அனுமதி கிடைத்ததும் உடனடியாக அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு நடத்தப்படும் என்றார்.

Post a Comment

0 Comments