பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா பராமரிப்பு )பணியிடத்திற்கு மாத தொகுப்பூதியமாக ரூ.27,804/ இருபத்தேழாயிரத்து எண்ணூற்று நான்கு மட்டும்) வழங்கப்படும். இதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி/ சமூகவியல்/குழந்தை மேம்பாடு/ சமூகவள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப்பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி/மனலம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூகவள மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலைப்பட்டம் மற்றும் பெண்கள் மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலைப்பட்டம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு/ சமூகநலன் சார்ந்த துறையில் திட்ட உருவாக்கம்/ செயல்படுத்தல், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையில் 2 வருட அனுபவம் மற்றும் கணிணியில் திறமை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்போர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும். சமூகப்பணியாளர் பணியிடத்திற்கு மாத தொகுப்பூதியமாக ரூ.18,536/ (ரூபாய் பதினெட்டாயிரத்து ஐநூற்று முப்பத்து ஆறு மட்டும்) வழங்கப்படும். இப்பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி/ சமூகவியல்/சமூக அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் கணிணியில் அனுபவம் இருத்தல் வேண்டும். விண்ணப்பிப்போர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.nilgiris. nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அல்லது நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்: 19, இரண்டாவது தளம், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பிங்கர்போஸ்ட், உதகமண்டலம், நீலகிரி மாவட்டம்–643006 என்ற முகவரிக்கு 10.02.2025 அன்று மாலை 5.30 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. தொலைபேசி எண்: 0423 - 2445529. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் தெரிவித்துள்ளார்
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்