Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண். 17/2024. நாள்: 07/11/2024,ன் படி அறிவிக்கப்பட்ட துறைத் தேர்வுகள் கடந்த 20/12/2024 முதல் 29/12/2024 வரை (25.12/2024 தவிர) கொள்குறிவகை. விரிந்துரைக்கும் வகை, கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வு அமைப்பு முறையில் சென்னை மற்றும் புதுடெல்லி உட்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றன.

இத்தேர்வின் கொள்குறி வகை மற்றும் விரிந்துரைக்கும் வகை (Only for Combination Pattern) தேர்வுகளின் உத்தேச விடைகள் Marked as tick) குறிக்கப்பட்ட வினாத்தாள் மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வுகளின் வினாத்தாள் ஆகியன (36 தேர்வுக் குறியீட்டு எண்கள் மட்டும்) தேர்வாணைய இணையதளத்தில் 10/01/2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும், முழுவதும் கொள்குறி வகைத் தேர்வுகளின் உத்தேச விடைகள் (100% Objective Type) மற்றும் முழுவதும் விரிந்துரைக்கும் வகைத் தேர்வுகளின் வினாத்தாள் (100% Descrptive Type) ஆகியவை பின்னர் தேர்வாணைய தெரிவிக்கப்படுகிறது. இணையதளத்தில் வெளியிடப்படும் என்று

துறைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் தாங்கள் எழுதிய கொள்குறி வகை தேர்வுகளின் உத்தேச விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் அதாவது 10/01/2025 முதல் 16/01/2025 அன்று மாலை 5.45 மணிவரை, விண்ணப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவு சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வுகுறியீட்டு எண். வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு tnpsc.qdd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரியை தவிர்த்து கடிதம் வாயிலாக விண்ணப்பதார்கள் மறுப்பு தகவல்களை தேர்வாணையத்திற்கு தெரிவித்தால் அத்தகவல்  ஏற்றுக்கொள்ளமாட்டாது/பரிசீலிக்கப்படமாட்டாது என தெரிவித்து கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments