Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர் நியமனம்- வெளியான முக்கிய தகவல்

ஆசிரியர் நியமனம்- வெளியான முக்கிய தகவல்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10 சதவீத உள்ஒதுக்கீடு 8 சதவீதமாகக் குறைக்கப் பட்டு, அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத உள்ஒ துக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறைச் செயலர் எஸ்.மதுமதி வெளியிட்ட அரசாணை: அரசு மேல் நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஒதுக்கீட்டை 8 சதவீதமாகக் குறைக்கவும், உரிய கல்வித் தகுதி கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு (கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக் கெழுத்து தட்டச்சர்) 2 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வும், அதற்கு ஏற்ப விதிமுறைகளில் திருத்தம் செய்யு மாறும் அரசுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கருத்துரு அனுப்பியுள்ளார்.

அதை ஏற்று, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கல்விப் பணி சிறப்பு விதிமுறைகளில் உரிய திருத்தம் செய்து அரசு ஆணையிடுகி து எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments