Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TEACHER - அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர ஆசிரியர் வேலை- 2 பள்ளிகளில் காலியாக உள்ள காலி பணியிடங்கள்-CLICK HERE

TRB - ஆசிரியர் நியமனம் - வெளியான புதிய அறிவிப்பு-CLICK HERE

Ration card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு-CLICK HERE

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்கள் Download செய்ய மீண்டும் வாய்ப்பு -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

TRB -Syllabus for Direct Recruitment of Secondary Grade Teachers and B.T. Assistants -CLICK HERE

TET COMPETITIVE EXAM SYLLABUS - ALL SUBJECTS -ஆசிரியர் தகுதி தேர்வு- நியமன தேர்வு பாடத்திட்டம்-CLICK HERE 

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

மேல்நிலைப் பொதுத் தேர்வு - 2025 - செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு - DGE செயல்முறைகள்!

மேல்நிலைப் பொதுத் தேர்வு - 2025 - செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு - DGE செயல்முறைகள்!
மார்ச்/ஏப்ரல் 2025, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்பட வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் குறித்தான சுற்றறிக்கை இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.

அதனை, ஆளுகைக்குட்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி வைத்து, உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மார்ச்/ஏப்ரல் -2025. மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் எழுத்துத் தேர்வுகளுக்கு முன்னதாக நடத்தப்படவேண்டும். பார்வையில் காணும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றியே செய்முறைத் தேர்வுப் பாடங்களுக்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து மேல்நிலை முதலாமாண்டு/ இரண்டாமாண்டு மாணவர்களது செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கு ஏதுவாக, ஒவ்வொரு பாடத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாடக் குறியீடுகள் (Subject codes for Practical) விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணாக்கருக்கு (Regular Candidates) செய்முறைத் தேர்வு

நடத்துதல்:

1. பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள UserID மற்றும் Password- பயன்படுத்தி, பிற்சேர்க்கை 1 மற்றும் 2- குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை அனைத்து தேர்வர்களுக்கும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

2. மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதும்பள்ளி மாணாக்கருக்கு, பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள், பிற்சேர்க்கை 1 மற்றும் 2-ல் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் நடத்தப்பட வேண்டும்.

மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கருக்கு (Regular candidates)

செய்முறைத் தேர்வு நடத்துதல்:

அரசாணை (நிலை) எண்.62. பள்ளிக் கல்வி (அ.தே)த் துறை,

நாள்.25.03.2022-ன் படி

1. மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் எழுதும் உடல் இயக்கக் குறைபாடு, பார்வைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி தேர்வர்களது விருப்பத்தின் பேரில் செய்முறை தேர்வின் போது ஆய்வக உதவியாளர் நியமனம் செய்தல்.

2.உடல் இயக்கக் குறைபாடு, பார்வைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளித் தேர்வர்களது விருப்பத்தின் பேரில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பாடங்களில் மட்டும், செய்முறைத் தேர்வுக்கு பதிலாக செய்முறை தொடர்பான கொள்குறி வகை வினாக்கள் (Multiple Choice Questions) அடங்கிய வினாத்தாட்கள் வழங்கி செய்முறைத் தேர்வு செய்துகொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்கள் (Absent candidates) :

செய்முறைத் தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / தலைமையாசிரியர்கள், செய்முறை புறத்தேர்வில் பங்கேற்காத பள்ளி மாணவர்களின் பதிவெண் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் - B-ல் (Proforma-B) பாடவாரியாக (அனைத்து செய்முறை பாடங்கள்) பூர்த்தி செய்ய வேண்டும். இப்படிவத்தினை செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியலுடன் தவறாது இணைத்து அனுப்ப வேண்டும்.

பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு மேற்கொள்ள வேண்டிய

நடவடிக்கைகள்:

1. செய்முறைத் தேர்வு மையங்கள் அமைத்தல்.

2. செய்முறைத் தேர்வு நடத்துவது தொடர்பாக கீழ்க்கண்ட

பணியாளர்களை நியமித்தல்

i. முதன்மைக் கண்காணிப்பாளர்
ii. புறத்தேர்வாளர்கள் (External Examiner ஆக வேறு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்)

iii. அகத்தேர்வாளர்கள் (Internal Examiner ஆக அதே பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்)

iv. திறமையான உதவியாளர்கள் (தேவைக்கேற்ப)

V. எழுத்தர்

vi. அலுவலக உதவியாளர்கள். துப்புரவு பணியாளர், குடிநீர் வழங்குபவர் (Waterman)

முதன்மைக் கல்வி அலுவலர்கள் போதுமான கல்வித் தகுதியுள்ள திறமையான பணியாளர்களை செய்முறைத் தேர்வு நடத்துவதற்கு நியமனம் செய்ய வேண்டும்.

செய்முறைத் தேர்வுகள் நடத்துவதற்கு துறை அலுவலர்களை நியமனம் செய்யத் தேவையில்லை.

முன்பணம் பெறுதல்:

பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள். தங்களது மாவட்டத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநரை அணுகி செய்முறை புறத் தேர்வு நடத்துவதற்கு தேவையான முன்பணத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும். செய்முறைத்தேர்வு முடிவுற்ற உடன் செலவினங்களை மேற்கொண்டதற்குரிய கணக்குகளை சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும்.

பணியாளர்களுக்கு உழைப்பூதியம் வழங்குதல்:

செய்முறைத் தேர்வுப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு உழைப்பூதியம் முன்பணம் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அரசுத் தேர்வுகள்

உதவி இயக்குநர்களிடமிருந்து செய்முறைத் தேர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்பே, முன்பணம் பெற்றிருந்தால் மட்டுமே அந்தந்த பாட செய்முறைத் தேர்வு நடைபெறும் கடைசி நாளன்று பணியாளர்கள் அனைவருக்கும் உழைப்பூதியத்தை வழங்க இயலும். பட்டுவாடா செய்யப்படும் உழைப்பூதிய பற்றுச்சீட்டுகளில் ஆசிரியர்கள் / பணியாளர்களிடம் நீல மையினால் (Blue ink) மட்டுமே கையொப்பம் பெறப்பட வேண்டும்.

உயிரியல் பாட செய்முறைத் தேர்வு:

உயிரியல் பாட செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல்களில், இரண்டு கலங்களாக (columns) பிரித்து, உயிரி - தாவரவியல் மற்றும் உயிரி- விலங்கியல் பாடங்களின் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும்.

இயற்பியல் பாட செய்முறைத் தேர்வு:

இயற்பியல் பாட செய்முறைத் தேர்விற்கு "Scientific Calculator excluding digital diary"-னை மட்டும் எடுத்து வர தேர்வர்களுக்கு அனுமதி வழங்கலாம். அவ்வகை Calculator-ஐ மட்டும் தான் தேர்வர்கள் வைத்திருக்கின்றனரா என்பதை தேர்வு ஆரம்பிப்பதற்கு முன் முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் புறத்தேர்வாளர்கள் (External Examiner) உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மதிப்பெண் பட்டியல் தயாரித்தல்:

செய்முறைத் தேர்வில் மாணாக்கருக்கு வழங்கும் மதிப்பெண்களை (செய்முறைத் தேர்வு அகமதிப்பெண்கள் உட்பட) இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலில் பதிவு செய்ய வேண்டும். முதன்மைக் கண்காணிப்பாளர் / தலைமையாசிரியர் ஒவ்வொரு நாளும் பூர்த்தி செய்யப்பட்ட செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்களை பாடவாரியாக தனித்தனி உறையில் (உறையில் பாட விவரம் எழுதப்பட்டிருக்க வேண்டும்) அரக்கு முத்திரையிட்டு தங்களது சொந்தப் பொறுப்பில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

மேலும், செய்முறை புறத்தேர்வு, செய்முறைப் பதிவேடு மற்றும் திறன் மதிப்பீட்டிற்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் ஒரு பதிவேட்டில் பதிந்து. தங்களது சொந்த பொறுப்பில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்களை முதன்மைக் கல்வி

அலுவலர் வழியாக அனுப்புதல்:

பொதுப்பாடப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவில் உள்ள அனைத்து செய்முறைத் தேர்வுகளும் முடிவுற்ற பின்னர், பாடவாரியாக பூர்த்தி செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியல்கள் அடங்கிய சீலிட்ட உறைகளை பொதுப்பாடப்பிரிவு செய்முறைத் தேர்வுகள் மற்றும்தொழிற்கல்வி பாடப்பிரிவு செய்முறைத் தேர்வுகள் என பிரித்து தனித்தனியே இரு கட்டுகளாக கட்டி சீல் இட வேண்டும்.

செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் நிறைவுற்றதற்கான பள்ளித் தலைமையாசிரியர் / முதன்மைக் கண்காணிப்பாளரின் சான்றிதழையும் (மாதிரிப் படிவம் இணைக்கப்பட்டுள்ளது) இணைக்க வேண்டும். அதன் பின்னர், கீழ்க்கண்ட ஆவணங்களை தனிநபர் மூலம் சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குறிப்பிடும் இடத்தில் தவறாது ஒப்படைக்கவேண்டும்.

மேலும். உதவி இயக்குநர்கள். முதன்மைக் கல்வி அலுவலருடன் ஒருங்கிணைந்து செய்முறைத் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை பள்ளிகளிடமிருந்து பெற்று. இணைப்பில் குறிப்பிட்டுள்ள கால அட்டவணையின்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.

1. சீல் இடப்பட்ட மேல்நிலை முதலாமாண்டு/ இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் அடங்கிய கட்டுகள் (பொதுப்பாடப் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவு)

2. و - A (ProformaA(

3. ឈ - B (Proforma B)

4. செய்முறைத் தேர்வு நிறைவுற்றதற்கான சான்றிதழ் (Certificate of Completion of Practical Examination)

செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்களை இணையதளம் வழி

பதிவேற்றம்:

அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்ட செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தங்களுக்கு வழங்கப்பட்ட USER ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி, பிற்சேர்க்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் பதிவேற்றம் செய்ய மேற்கொள்ள வேண்டும். நடவடிக்கை

தங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்கள் அனைவரது செய்முறைத் தேர்வு மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். எந்த ஒரு மாணவரது மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்படாமல் இருத்தல் கூடாது.

இணையதளம் வாயிலாக செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் பணி நிறைவடைந்த பின்பு, அனைத்து மேல்நிலைப் பள்ளிகளின் மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் கட்டுகளை (உரிய இணைப்புகளுடன்) பள்ளி எண் வாரியாக கட்டுகளாகக் கட்டி, சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் பாதுக்காப்பாக வைத்திருக்க வேண்டும்.

மேலும், தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வுகள் எவ்வித புகாருக்கும் இடமின்றி நடைபெறுவதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.




Post a Comment

0 Comments