Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

சத்துணவு அமைப்பாளர்களுக்கான கூடுதல் பொறுப்புப் படியை 1000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!

சத்துணவு அமைப்பாளர்களுக்கான கூடுதல் பொறுப்புப் படியை 1000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப்படியினை, சிறப்பு நிகழ்வாக, கூடுதல் பொறுப்பு வகிக்கும் மையம் ஒன்றுக்கு ரூ.10-லிருந்து நாளொன்றுக்கு ரூ.20 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், சத்துணவு மையங்களின் செயல்பாட்டில் எவ்வித தடங்கலும் ஏற்படாவண்ணம் போதிய பணியாளர்களை கூடுதல் பொறுப்பு வகிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கள அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு சமுக நல ஆணையருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், சமூக நல ஆணையர். தற்போது ஏற்பட்டுள்ள அதிக காலிப்பணியிடங்கள் காரணமாக, ஒரு சத்துணவு அமைப்பாளர், ஒன்றுக்கு மேற்பட்ட சத்துணவு மையங்களை கூடுதலாக கவனித்து வருவதாலும், உயர்ந்து, வரும் விலைவாசி காரணமாகவும், சத்துணவுப் பணியாளர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.20/- வீதம், மாதத்திற்கு ரூ.600/- ஆக வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப்படியினை, ஒரு நாளுக்கு ரூ.33/- வீதம் ரூ.1000/-ஆக உயர்த்தி கூடுதல் பொறுப்புப்படியினை நிர்ணயம் செய்து ஆணை வெளியிடுமாறு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

3. சமூக நல ஆணையரின் கருத்துரு அரசளவில் கவனமுடன் பரிசீலனை செய்யப்பட்டது. அதனடிப்படையில், பின்வருமாறு ஆணைகள் வெளியிடலாம் என முடிவு செய்து, அவ்வாறே அரசு ஆணையிடுகிறது:-

1 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின்கீழ் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.20/- வீதம், மாதத்திற்கு ரூ.600/- ஆக வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப் படியினை, ஒரு நாளுக்கு ரூ.33/- வீதம் ரூ.1000/-ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.

H ஒரு சத்துணவு அமைப்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட சத்துணவு மையங்களை கூடுதலாக கவனித்து வந்தாலும், ஒரு மையத்திற்கு உண்டான கூடுதல் பொறுப்புப்படி மட்டுமே வழங்கப்படும். ஒரு வாரத்திற்கு மேல் கூடுதல் பணிபுரிந்தால் மட்டும் கூடுதல் பொறுப்புப்படி வழங்கப்படும்.

அதனைத் தொடர்ந்து, பொறுப்பேற்ற நாளிலிருந்து முடியும் நாள் வரை உள்ள காலத்திற்கு தற்செயல் விடுப்பு நாட்களைத் தவிர, ஏனைய கூடுதல் பொறுப்பேற்ற நாட்களுக்கு (விடுமுறை நாட்கள் உட்பட) பொறுப்புப்படி வழங்கப்படும்.

iv. ஒரு வாரத்திற்குமேல் பணிபுரிந்து இருந்தால் (ஒரு மாதம் முழுவதும் பணிபுரியாமல்), பணியாற்றிய நாளுக்கு (1000-30 = 33.33 (Round off Rs.33/-) ரூ.33/- வீதம் கணக்கிட்டு வழங்கப்படும். ஒரு மாதம் முழுவதுமாக கூடுதல் பணிபுரிந்து இருந்தால், கூடுதல் பொறுப்புப்படியாக ரூ.1,000/- வழங்கப்படும்.

V உயர்த்தப்படும் கூடுதல் பொறுப்புப்படி, இவ்வாணை வெளியிடப்படும் நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது.

vi மேலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின்கீழ். பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப்படியினை, ரூ.1000/- உயர்த்தி வழங்குவதால் ஆண்டிற்கு தோராயமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினம் ரூ.6,68.11.200/-(ரூபாய் ஆறு கோடியே அறுபத்தெட்டு இலட்சத்து பதினோராயிரத்து இருநூறு மட்டும்) ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது.


Post a Comment

0 Comments