Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு வினா விடை

கரூரில் 10 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகள் 14,761 பேருக்கு வினா விடை வங்கி புத்தகங்களை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி புதன்கி ழமை வழங்கினார்.
கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்து, கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 130 பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங் கிலம் வழியில் 10-ஆம் வகுப்பு பயிலும் 8,105 மாணவ, மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் வினா விடைவங்கி புத்தகங்களும், பிளஸ்-2 பாடத்தில் தமிழ், ஆங்கி லம், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வரலாறு, உயிரியியல், பொருளியல் வணிகவியல், கணக் குப்பதிவியியல் ஆகிய பாடங்களை பயிலும் 6,656 மாணவ, மாணவிக ளுக்கும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.ம திவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, இளங்கோ மற்றும் மாநகராட்சி மேயர் கவிதாகணேசன், ஆணையர் சுதா உள் ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments