Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Tn job Alert: மாவட்ட வள பயிற்றுநர் பணிக்கு பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

மாவட்ட வள பயிற்றுநர் பணிக்கு பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு
Salem மாவட்டத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணிக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

TAMILNADU மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சேலம் மாவட்டத்தில் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மேலாண்மை இயக்குநர், சென்னை அவர்களின் அறிவுரையின்படி, மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான ஒருமாவட்டவள பயிற்றுநர் பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கான வயது 01.11.2024ன் படி 25 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி & அனுபவம் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் மூன்று வருட அனுபவம் அல்லது P.G.Diploma பயிற்றுநராக ஒரு வருட அனுபவம் ஏற்புடையது. அதேபோன்று TAMIL மற்றும் ENGLISH எழுத, படிக்க மற்றும் பேசுவதில் சிறப்புடையவராக இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர் மாவட்ட வள பயிற்றுநர் ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருடத்திற்கு மட்டும் நியமனம் செய்யப்படுவர்.

மேற்படி, விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், அறை எண்: 207, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம் 636 001 என்ற முகவரிக்கு வருகின்ற 31.12.2024 மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments