Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Padasalai : புயல் காரணமாக அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்ட மாவட்டங்களுக்கான புதிய தேர்வு அட்டவணை வெளியீடு

Padasalai : புயல் காரணமாக அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்ட மாவட்டங்களுக்கான புதிய தேர்வு அட்டவணை வெளியீடு

தொடக்கக் கல்வி இரண்டாம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு - பெஞ்சல் புயல் கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டது தற்போது தேர்வு தேதி அறிவித்தல்-சார்ந்து.
பார்வை

1. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அவர்கள் துறைத் தலைவர்களுக்கான கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள்.

இரண்டாம் பருவத்தேர்வு 16.12.2024 முதல் 23.12.2024 முடிய நடைபெறும் என பார்வை 2ல் கண்ட செயல்முறைகளின் படி தெரிவிக்கப்பட்டது. இரண்டாம் பருவத் தேர்வு தொடங்கி பெஞ்சல் புயல் கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மட்டும் பருவத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அத்தேர்வு 02.01.2025 முதல் இணைப்பில் உள்ள அட்டவணையில் தெரிவித்துள்ளபடி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி, மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக இவ்விவரத்தினை தெரிவிக்குமாறு சார்ந்த மாவட்டக் கல்வி (தொடக்கக்கல்வி) அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Post a Comment

0 Comments