Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு- முக்கிய தகவல்- அனைவருக்கும் ஷேர் செய்வோம்

பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு- முக்கிய தகவல்- அனைவருக்கும் ஷேர் செய்வோம்

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் fengal புயலாக வலுப்பெற்று கரையை கடந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளன.


இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நாளை(02.12.2024) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி வளாகத்தில் உள்ள மழைநீர் தேங்கி உள்ளதா? மின் கசிவு ஏதேனும் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

Post a Comment

0 Comments