Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TEACHER - அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர ஆசிரியர் வேலை- 2 பள்ளிகளில் காலியாக உள்ள காலி பணியிடங்கள்-CLICK HERE

TRB - ஆசிரியர் நியமனம் - வெளியான புதிய அறிவிப்பு-CLICK HERE

Ration card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு-CLICK HERE

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்கள் Download செய்ய மீண்டும் வாய்ப்பு -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

TRB -Syllabus for Direct Recruitment of Secondary Grade Teachers and B.T. Assistants -CLICK HERE

TET COMPETITIVE EXAM SYLLABUS - ALL SUBJECTS -ஆசிரியர் தகுதி தேர்வு- நியமன தேர்வு பாடத்திட்டம்-CLICK HERE 

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

6-8TH std student-state level kalai thiruvila competition-CEO proceedings

6-8TH std student-state level kalai thiruvila competition-CEO proceedings 
பார்வையில் கண்டுள்ள செயல்முறைகளின் படி திருப்பூர் மாவட்டத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 04.01.2025 சனிக்கிழமை அன்று 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான KANGEYAM INSTITUTE OF COMMERCE, EBET COLLEGE , நத்தக்கடையூர், காங்கேயம், திருப்பூர் மாவட்டம் என்னும் இடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்திடவும், மாணவிகள் கலந்து கொள்ளும் போட்டியில் பெண் ஆசிரியர்கள் உடன் இருந்து அவர்களது பாதுகாப்பினை உறுதி செய்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. போட்டிகளின் நெறிமுறைகள்:

6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்ட கலைத்திருவிழா போட்டிகளில், ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவர்களைக் கொண்டு (அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் முதலிடம் பிடித்த ஒருவர் அல்லது ஒரு குழு மட்டுமே) மாநில அளவிலான போட்டிகள் அரசுப் பள்ளிகளுக்கு தனியாகவும், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு தனியாகவும் நடத்தப்படும்.

தங்குவதற்கு ஏற்ற வகையில் தேவையான ஆடைகள், போர்வை மற்றும் மருந்துகள் போன்றவற்றை உடன் கொண்டு வருமாறு மாணவ, மாணவியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. போட்டிகளுக்கு மாணவர்கள் எவரும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

மாநில அளவிலான போட்டிகளுக்கு மாணவ மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து வந்து மீண்டும் அழைத்துச் செல்வது, சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் (ESCORT) பொறுப்பாகும்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு செல்லும் மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் (Consent Letter from Parent) கட்டாயமாக பெறப்படுதல் வேண்டும். அவ்வாறாக பெறப்படும் ஒப்புதல் கடிதங்களை முறையாக பராமரித்தல், சார்ந்த தலைமையாசிரியரின் பொறுப்பாகும்.

மாநில அளவிலான போட்டிகளுக்கு மாணவ மாணவியர்களை அழைத்து வரும் நேர்வில் உடன் ஆண் ஆசிரியர் / பெண் ஆசிரியை ஒருவர் (மாணவியருடன் பெண் ஆசிரியை ஒருவர்) கட்டாயம் வரவேண்டும்.

ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல் போட்டிக்கு வரைதாள் (Chart Paper) மட்டுமே வழங்கப்படும். பிற பொருள்கள் அனைத்தையும் போட்டியாளர்கள் கொண்டு வரவேண்டும்.

போட்டிகளுக்கான தலைப்புகளை மையக்கருத்தின் அடிப்படையில் நடுவர்களே தீர்மானிப்பர்.

செவ்வியல் இசைக்கு (Classical Music) சுருதிப்பெட்டி பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் போட்டியாளர்கள் தமக்கு பிடித்த ராகத்தில் பாட அனுமதியுண்டு.

கிராமிய நடனங்களில் அதற்கேற்ற கிராமிய தன்மை சார்ந்த உடைகளையே அணிதல் வேண்டும். மிகை ஒப்பனையான அலங்கார ஆடைகளை அணிதல் கூடாது.

கிராமிய நடனம்/பரதநாட்டியம்/குழு நடனம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட இசை/பாடல்களை குறிப்பிட்ட மணித்துளிகளுக்கு பாடல்களை பதிவு செய்திருக்க வேண்டும். போட்டிக்கான (5 மணித்துளிக்குள்) பாடல்களை பதிவிறக்கம் செய்து PEN DRIVE அல்லது MOBILEலில் வைத்துக் கொள்ளவும்.

பின்புலப்பங்கேற்பாளர்/பின்னிசை இசைப்போர் யாவரும் அந்தந்த பிரிவு வகைக்கான வயதுடையவர்களாகவே இருக்க வேண்டும். பாரம்பரியமாகப் பழக்கத்தில் உள்ள கலை வடிவங்களைப் படைக்கும் போது பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு 2/3 ராகம், தாளம் தவிர புதிய ராகம், புதியதாளம் மற்றும் மிகைப்படியான நாட்டிய அசைவுகள் முதலியன அனுமதிக்கப்படமாட்டாது.

பாரம்பரியக் கருவிகள், உபகரணங்கள் (குத்துவிளக்கு, செப்புக்குடம்) எவையேனும் தேவைப்படின் அவற்றைப் போட்டியாளர்கள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments