ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றங்கள்
சாறு எடுக்கப்பட்ட / உப்பிட்ட தயாரிப்புகள்:நொறுக்குத்தீனி மற்றும் தின்பண்டங்கள் போன்றவைகளுக்கு ஜிஎஸ்டி வரி 18%- லிருந்து 12% -மாக குறைப்பு.
உலோகக் கழிவுகள்: மாற்று வரி விதிப்பு முறை அறிமுகம்; வர்த்தகம் 2 வர்த்தகம் சார்ந்த பரிவர்த்தனைகளில் 2% வரிப்பிடித்தம்.
தீர்வைகள் & வரி விலக்குகள்
ஏற்றுமதி வரி: பல்வேறு அரிசி ரகங்களுக்கு வரி குறைப்பு.
கட்டுமான இருப்பிட கட்டணங்கள்: இருப்பிட மாற்ற சேவைகளுடன் சேர்ந்த கட்டணங்கள் கட்டுமான சேவையின் ஒரு அங்கமாகக் கருதப்பட்டு வரி விதிக்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி & மேம்பாட்டு சேவைகள்: அரசு நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சி அமைப்புகளால் மாநிலங்களுடன் வழங்கப்படும் சேவைகளுக்கு வரி விலக்கு, கடந்த காலங்களுக்கும் முறைப்படுத்தப்பட்டது.
கல்வி & சொத்து
இணைப்பு சேவைகள்: சிபிஎஸ்சி போன்ற
கல்வி வாரியங்களுக்கான வரிவிதிப்பு என்பது மாநில / மத்திய கல்வி வாரியங்களின் படிப்புகளை போதிக்கும் அரசு பள்ளிகளுக்கான வரி விலக்கு. கடந்த காலங்களுக்கும் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக சேவைகள்:
கல்லூரிகளுக்கான இணைப்பு சேவைகளுக்கு @ 18% வீத வரி விதிக்கப்படும்
வெளிநாட்டு விமான நிறுவனங்கள்: விலை இல்லாமல் இறக்குமதி செய்யப்படும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு, கடந்த காலங்களுக்கும் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
வர்த்தக சொத்துக்களுக்கான வாடகை:
பதிவு செய்யப்படாத நபர்களிடமிருந்து வாடகைக்கு எடுக்கும்போது மாற்றுமுறை வரி விதிப்பு பயன்படுத்தப்படுகிறது.
போக்குவரத்து & பயன்பாடுகள்
ஜி.டி.ஏ சேவைகள்: சரக்குப் போக்குவரத்தின் ஒரு பகுதியாக அது சார்ந்த துணை சேவைகளும் இணைத்து வழங்கப்படும்போது சரக்குப் போக்குவரத்தாகவே கருதப்படும்; துணை சேவைகளுக்கான தனி விலைப்பட்டியல் இதில் சேர்க்கப்படவில்லை.
திரைப்பட விநியோகம்: 01.10.2021-க்கு முந்தைய காலத்திற்கான திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் துணை விநியோகஸ்தர்களுக்கான முறைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு.
மின்சாரம் தொடர்பான சேவைகள்: மின் இணைப்பு, மீட்டர் வாடகை, பரிசோதனை மற்றும் தொழிலாளர் கட்டணங்கள் ஆகிய சேவைகள் ஒரே தொகுப்பாக வழங்கப்படுவதாக இருந்தால் அந்த சேவைகளுக்கு வரி விளக்கு அளிக்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்