பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தை திட்டமிட அவசியமானதாக பகருதப்படும் 10, 1 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளன.
பொதுத்தேர்வுக்குப் படிக்கும் போது வெறுமனே புத்தகத்தைப் புரட்டி மனப்பாடம் செய்தால் படித்தது நினைவில் நிற்காது. முக்கிய வினா- விடைகளை நன்கு மனதில் நிறுத் திப் படித்தும், எழுதியும் பார்க்க வேண்டும். பின்னர், ஒருமுறை தேர்வு போல் பார்க்காமல் எழுதி நாமே திருத்த வேண்டும். தவறுகள் இருந்தால் அவற்றை திருத்திக் கொண்டு மீண்டும் ஒருமுறை தவறில்லாமல் எழுதிப் பார்க்க வேண்டும்.
இவ்வாறாகப் புரிந்துகொண்டுப் படித்து எழுதினால் பாடங்கள் எளிதில் மறந்துவிடாது. மேலும், பொதுத்தேர்வு குறித்த பயத்தை போக்கவும் சுயத்தேர்வு வழிவகுக்கும். அதேபோல், ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டியப் பாடங்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு அதன் படி, படிக்க வேண்டும். படிக்கும்போதே கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் வரும் முக்கியமான சமன்பாடுகள், சூத்திரங்களை தனியாக எழுதி வைத்து மனதுக்குள் சொல்லிப் பார்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் பாடங்களை திட்டமிட்டு படிப்பதோடு, அவற்றை எழுதிப்பார்ப்பது சுயப்பரிசோதனை செய்துகொள்வது தேர்வு பயத்தைப் போக்கி வெற்றியை உறுதிப்படுத்தும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்