Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

ஊரகத் திறனாய்வு தேர்வு-Trust Examination) 2024-2025- ஆம் கல்வியாண்டிற்கான தேர்வு விண்ணப்பங்கள் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்தல்

ஊரகத் திறனாய்வு தேர்வு-Trust Examination) 2024-2025- ஆம் கல்வியாண்டிற்கான தேர்வு விண்ணப்பங்கள் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்தல்
அரசுத் தேர்வுத் துறையால் ஆண்டு தோறும் தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான “ஊரகத் திறனாய்வு தேர்வு" பார்வை 1-ல் கண்ட அரசாணையின் படி நடைபெற்று வருகிறது.

தகுதியான தேர்வர்கள்

இத்தேர்விற்கு ஊரகப் பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2024-2025ஆம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவராவார்கள். நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாது.

ஆண்டு வருமானம்

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- க்கு (ரூபாய் ஒரு இலட்சத்திற்கு) மிகாமல் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தல்

14.12.2024 அன்று நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான வெற்று விண்ணப்பங்கைைள 12.11.2024 முதல் 20.11.2024 வரை www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளம் மூலம் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட வெற்று விண்ணப்பங்களை தேர்வுக்கு விருப்பமுள்ள மாணவர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருவாய்ச் சான்றினையும் இணைத்து

22.11.2024 க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேர்வுக் கட்டணம் ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர் ஒவ்வொருவரிடமிருந்தும்

தேர்வுக் கட்டணமாக ரூ.10-னை பணமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.


விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்தல்

தேர்வர்களிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்பட்ட அவ்விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இவ்வலுவலக இணையதளத்தில் சென்று தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட USER ID, Password மூலம் தலைமை ஆசிரியர் தேர்வர்களின் அனைத்து விண்ணப்பங்கைைளயும் 14.11.2024 முதல் 22.11.2024 வரை Online மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்படி தேதிக்கு பிறகு பதிவு செய்வது இயலாது என்பதால் தேர்வர்கள் பாதிக்கப்படா வண்ணம் 22.11.2024 க்குள் பதிவு செய்ய வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களில் உள்ளவாறு அனைத்து விவரங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை தலைமையாசிரியர் உறுதி செய்த பிறகு இணையதளம் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது. தேர்வு கட்டணம் செலுத்திய பிறகு மாணவர்களின் விவரங்களை திருத்தம் மேற்கொள்ள இயலாது என்ற விவரத்தினை பள்ளித் தலைமையாசிரியரிடம் அறிவுறுத்த வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்திய பிறகு Summary Report, பள்ளியில் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் (தேர்வர்களின் விவரங்களுடன்) முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்திட பள்ளித் தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.

தகுதியான பள்ளிகளைஅனுமதித்தல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையாசிரியரால் பதிவு செய்த விவரத்தினை பெற்று அப்பள்ளிகள் ஊரகப் பகுதியைச் சார்ந்ததுதானா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும். தேர்வுக்கு (அரசாணை எண். 960 Education (E2) Department நாள் 11.10.91 பத்தி எண் 4-ல் குறிப்பிட்டுள்ளவாறு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) தகுதியுள்ள பள்ளிகளின் பதிவு செய்த மாணவர்களின் விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலரின் பொறுப்பில் வைத்துக் கொண்டு தகுதியற்ற பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக நீக்கம் செய்ய வேண்டும். பின்னரே தேர்வு மைய இணைப்புப் பணியினை மேற்கொள்ள வேண்டும்.

இத்தேர்விற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தேர்வர்களுக்கு வழங்குதல் மற்றும் பதிவேற்றம் செய்வது குறித்தான விவரங்களை தங்கள் ஆளுகைக்குட்பட்ட ஊரகப்பகுதிகளிலுள்ள அனைத்து மேல்நிலை / இடைநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்காண் அறிவுரைகளை தவறாது பின்பற்றி தேர்வுகளை நடத்துவதற்கானமுன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும்கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments