Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர் பணியிடங்கள் - முன்னாள் முதலமைச்சர் வெளியிட்ட புதிய செய்தி

ஆசிரியர் காலிப் பணியிடங்களை தமிழக அரசு
உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அதி முக பொதுச் செயலர் எடப்பாடி பழனி சாமி வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை

வெளியிட்ட அறிக்கை:

2021-இல் திமுக அரசு பதவியேற்றதில் இருந்து துறைகள்தோறும் காலிப் பணியி டங்கள் அதிகரித்துள்ளன. 5,154 தற்காலி கப் பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து, அதன்மூலம் மாணவர் கற்றல் நலன் பாது காக்கப்படுவதாக திமுக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், 2024– ஆம் ஆண்டு, பி.டி. மற்றும் பிஆர்டிஇ பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடம் 3,192 என்று விளம்பரம் செய்து அதற்காக நிய மனத் தேர்வு நடத்தியது.

தற்போது இதில் பல பணியிடங்களைக் குறைத்து 2,803 பணி யிடங்களுக்கு மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளதா கத் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவித்துள் ளனர். அதனால், இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் இருந்து 5,154 காலிப் பணியிடங்களையும் நிரப்ப ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்க ளையும் நிரப்ப பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments