Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில்
ரூ.15.08 கோடி மதிப்பில் செயற்கை இழையிலான தடகள ஓடுதளப் பாதை அமைக்கப்படும்

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (25.11.2024) கடலூர் மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பொன்விழாவினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழாவில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 683 ஊராட்சிகளுக்கு. 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 835 தொகுப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பேசியதாவது

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு சார்பாக, கடலூர் மாவட்டத்தில் இன்று இந்த அரசு நிகழ்ச்சியின் மூலம் 12 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

கடந்த 3 நாட்களாக ஏராளமான நிகழ்ச்சிகள்.. திருச்சி மாவட்டத்தில் ஆரம்பித்து துறையூரில் தொடங்கி, நாகை, சீர்காழி போன்ற இடங்களில் நடைபெற்ற அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கேற்றுவிட்டு இன்றைக்கு கடலூருக்கு வந்து சேர்ந்திருக்கின்றேன்.

கடலூருக்கு பல முறை வந்திருக்கின்றேன். அண்ணன் எம்.ஆர்.கே அமைச்சர் அவர்கள் சொன்னதுபோல. பல முறை வந்திருக்கின்றேன். பிரச்சாரம். கழக நிகழ்ச்சி. அரசு நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினராக வந்திருக்கின்றேன். விளையாட்டுத் துறை அமைச்சராக வந்திருக்கின்றேன். ஆனால், முதல் முறையாக துணை முதலமைச்சராக பொறுப்பேற்று உங்களை எல்லாம் சந்தித்து, உங்களுடைய வாழ்த்துகளை பெறுவதற்கு நான் இங்கு வந்திருக்கின்றேன். திராவிட மாடல் என்று சொன்னாலே எல்லாருக்கும் எல்லாம் என்று தான் அர்த்தம். அதன் அடிப்படையில்இந்த நிகழ்ச்சிக் கூட ஒரு திராவிட மாடல் நிகழ்ச்சி என்று சொல்லலாம். ஏனென்றால், இங்கே எல்லாருக்கும் எல்லாம் அனைத்து திட்டங்களும் கொடுக்கப்படுகிறது. கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டம் மூலம், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் 33 வகையான ஸ்போர்ட்ஸ் கிட் உபகரணங்கள் கொடுக்கப்படுகிறது.

மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 10 ஆயிரம் சகோதரிகளுக்கு 72 கோடி ரூபாய் மதிப்பில் வங்கி கடன் அதிகமானவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா, முனைவோர்கள். மாற்றுத்திறனாளிகள். இணைப்புகள். ஆயிரத்துக்கு விவசாயிகள். பிற்படுத்தப்பட்டோர். தொழில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர். பட்டியலினத்தோர் என அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் கொண்டு போய் சேர்க்கப்படுகிறது.

இப்படி யார் யாருக்கு என்னென்ன தேவை என்பதை பார்த்து பார்த்து நிறைவேற்றுவதுதான் நம்முடைய திராவிட மாடல் முதலமைச்சர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நம்முடைய திராவிட மாடல் அரசு என்பதை நீங்கள் மறந்துவிட முடியாது. இங்கே நலத்திட்டங்களை பெறுகிற அத்தனைப்பேருக்கும் முதலில் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் விளையாட்டுத்துறையில் திறமையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரில் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் என்ற திட்டத்தை சென்ற வருடம் ஆரம்பித்தோம். இதுவரைக்கும் சுமார் 30 மாவட்டங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் (Sports kids) கொடுக்கப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments