Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

புதுச்சேரி/காரைக்கால் மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை

புதுச்சேரி/காரைக்கால் மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை

சென்னை மண்டல வானிலை மையத்தின் அறிக்கையின் படி, தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக, 14-ந் தேதி வாக்கில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது மேலும் வலுவடைந்து தெற்கு ஆந்திர, வடதமிழகம் மற்றும் புதுவைப் கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வருகின்ற அக்டோபர் 14-ந் தேதி மற்றும் 15-ந் தேதிகளில், தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடம் என்றும் அக்டோபர் 16-த் தேதி மற்றும் 17-த் தேதிகளில் வடதமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அக்டோபர் 14 மற்றும் 15-ந் தேதிகளில் தமிழக புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் காற்று அதிகமாக வீசும் பகுதிகளுக்கு செல்லாமல் மிகவும் பாதுகாப்பாக மீன்பிடிப்பில் ஈடுபடுமாறும் மேலும் அக்டோபர் 16-ந் தேதி மற்றும் 17-ந் தேதிகளில் வடதமிழக மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபடக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அவ்வப்பொழுதுவெளியிடப்படும் வானிலை முன் எச்சரிக்கை செய்திகளை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments