1. தேர்வர் விண்ணப்பத்திலுள்ள அனைத்து கலங்களையும் தவறாது பூர்த்தி செய்தல் வேண்டும்.
2. இவ்விண்ணப்பப் படிவமானது இரண்டு படிவங்களில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். செய்முறை வகுப்பிற்கான கட்டணம் ரூ.125/- பணமாக அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் செலுத்துதல் வேண்டும்.
3. கீழ்க்கண்ட கல்வித் தகுதிகளையுடைய தேர்வர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.
(i) நேரடி தனித்தேர்வர்கள்:
(அ) தேர்வு நடைபெறும் மாதத்தின் முதல் நாளன்று 14 1/2 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத்துடன் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ/மாணவியரும் மற்றும் 9ம் வகுப்பு பயின்று இடையில் நின்ற மாணவ/மாணவியரும், தேர்வுத் துறையால் நடத்தப்படும் எட்டாம் வகுப்பு (ESLC) பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வை எழுதலாம்.
(ஆ)அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கல்வி காப்புறுதி திட்டத்தின் கீழ் பயின்று 8- ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றதாக மாற்று சான்றிதழ் பெற்றவர்கள். (இ) உண்டு உறைவிடப்பள்ளியில் 8-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றதாக
மாற்றுச் சான்றிதழ் பெற்றவர்கள்.
(ஈ) திறந்தவெளி பள்ளியில் "C"Level சான்றிதழ் பெற்றவர்கள்.
(உ) 14 1/2 வயதை பூர்த்தி செய்த உழைக்கும் சிறார் கல்வி திட்டத்தின் கீழ் தொழிலாளர் அமைச்சகம் இந்திய அரசின் கீழ் வழங்கப்பட்ட முறைசாராக் கல்வி மாற்றுச் சான்றிதழ் பெற்றவர்கள்.
(ஊ) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட திறந்தவெளிப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பெறாதவர்கள் தேர்வு நடைபெறும் மாதத்தின் முதல் தேதியன்று 14 1/2 வயது பூர்த்தி செய்யும்பட்சத்தில் திறந்த வெளி பாடத் திட்டத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத பாடங்களை மட்டும் தனித்தேர்வர்களாக 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் நடைபெறவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
(ii) ஏற்கனவே தேர்வெழுதி தோல்வியுற்ற தனித்தேர்வர்கள்:
முந்தைய ஆண்டுகளில் பழைய பாடத்திட்டத்தில்/சமச்சீர்கல்வி
பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில்
தோல்வியுற்று, செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு பெயர் பதிவு செய்திராத
தனித்தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் பெயர் பதிவு செய்ய
அறிவுறுத்தப்படுகிறார்கள்.
4. சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான வண்ண நிழற்படத்தை மட்டுமே ஒட்ட வேண்டும். கருப்பு வெள்ளையிலான நிழற்படத்தை ஒட்டக்கூடாது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்