Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

தேசிய திறந்தநிலைப் பள்ளிக்கல்வி நிறுவ னம் (என்ஐஓஎஸ்) அளிக்கும் கல்விச் சான்றிதழ் தமிழக அரசு வழங்கக் கூடிய பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சான்றிதழுக்கு இணையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனத்தின் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ் தொடர்பான அறிவிப்பை பள் ளிக்கல்வித் துறை வெளியிட்டுள் ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலர் மதுமதி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனத்தின் (என்ஐஓ எஸ்.) பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பு சான்றிதழ், தமிழக அர சின் வாரியம் வழங்கக்கூடிய பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பு சான்றிதழுக்கு இருக்கும். சமமானதாக

இந்த சான்றிதழை அரசு சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கும், பதவி உயர்வுகளுக்கும் பயன்படுத்தலாம். உயர்கல்வி, மனிதவள மேலாண்மைத் துறை களின் ஒப்புதலுடன் இந்த உத் தரவு வெளியிடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments